சட்டசபையில் மதுவிலக்கு திருத்த சட்டமசோதா தாக்கல்….

assembly ni 1 - சட்டசபையில் மதுவிலக்கு திருத்த சட்டமசோதா தாக்கல்....

கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்டனைகள் கடுமையாக்கப்படும் என அறிவித்த நிலையில், மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார்.

இந்த சட்டத்திருத்தத்தின் மூலம், கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் – 1937ன்படி, விதிகளை மீறி மது இறக்குமதி, ஏற்றுமதி செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். மேலும், கள்ளச்சாராய விற்பனைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

மது அருந்தப் பயன்படுத்தப்படும் உரிமையற்ற இடங்கள் மூடப்பட்டு சீலிடப்படும். தண்டனை பெற்ற ஒருவரை அந்த பகுதியில் இருந்து நீக்குவதற்காக, மதுவிலக்கு மற்றும் புலனாய்வு அதிகாரியால் விண்ணப்பம் செய்யும் சட்டத்திருத்தமும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இத்துடன், தண்டனைகள் மற்றும் அபராத தொகைகளையும் அதிகரித்து, அதிகாரிகளுக்கு  அதிகாரம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *