குழந்தையை சுற்றி வளைத்த தெரு நாய்கள்: இமைப்பொழுதில் காப்பாற்றிய தந்தை :  வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்.

1343964 doo - குழந்தையை சுற்றி வளைத்த தெரு நாய்கள்: இமைப்பொழுதில் காப்பாற்றிய தந்தை :  வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்.

கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தி விட்டு தனது மகனை இறக்கி விட்டு, விட்டு வீட்டுக்குள் சென்றார்.அப்போது அப்பகுதியில் இருந்த நான்கு தெரு நாய்கள் குழந்தையை நோக்கி ஓடி வந்து உள்ளது. இதனை பார்த்த அந்த சிறுவன் அச்சமின்றி கீழே கிடந்த கல்லை எடுத்து நாய்களை விரட்ட முயன்று உள்ளார். ஆனால் அதற்கெல்லாம் அஞ்சாத தெரு நாய்கள் சிறுவனை சுற்றி வளைத்தது. தெருநாய்கள் சுற்றி வளைப்பதை பார்த்து சிறுவன்  கூச்சலிடவே, கூச்சல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் சென்று கொண்டு இருந்த தந்தை விரைந்து வந்து சிறுவனை மீட்ட நிலையில், அங்கு இருந்து தெரு நாய்கள் வந்த வேகத்தில் திரும்பின. இந்த  காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. அதில் சிறுவன் நான்கு தெரு நாய்கள் வருவதைப் பார்த்து கல்லை எடுப்பதும், இமை பொழுதில் தெரு நாய்கள் சிறுவனை சுற்றி வளைப்பதும் , அச்சத்தில் இருந்த சிறுவனை தந்தை காப்பாற்றுவதும் தெளிவாக பதிவாகி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அண்மைக் காலமாக தெரு நாய்கள் குழந்தைகளை கடித்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் நிலையில், குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறையினர் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது ஒட்டுமொத்த பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *