அதிமுக நிர்வாகி கைது…..

சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக அதிமுக நிர்வாகி சுரேஷ்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள கள்ளநத்தம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் மீது கடந்த காலங்களில் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு வழக்குகளிள் இவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டும் உள்ளார். இவர் அஇஅதிமுக விவசாய அணியின் ஆத்தூர் கிழக்கு மண்டல செயலாளராக பொறுப்பு வகித்தவர். தற்போது அஇஅதிமுக உறுப்பினராக உள்ளார்.இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மணப்பாச்சி சுற்றுவட்டாரத்தில் கல்வராயன் மலையையொட்டிய பகுதிகளில் சுரேஷ் சமீப காலமாக சாராயம் காய்ச்சி விற்று வந்தது குறித்த தகவல் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு சாராயம் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட சுரேஷ்குமாரை கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, இன்று(ஜூன் 25) அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க  குடிபோதையில் சென்று டிபன் கடையில் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஹுனார் இந்திய நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் கலை கண்காட்சி துபாயில் திறக்கப்படுகிறது.<br>

Sat Jun 29 , 2024
• துபாய் கலை மையம் தற்போது “ஹுனார்”நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த கண்காட்சியில் இந்திய நாட்டுப்புற மற்றும் பழங்குடி கலைகளின் வசீகரிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்படுகிறது. • கண்காட்சி இந்தியாவின் நாட்டுப்புற மற்றும் பழங்குடி கலை வடிவங்களின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகிறது. • கண்காட்சிக்கு வருபவர்கள் இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு கலை பாணிகளை அறியலாம், இதில் உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து ஐபன் கலை, பீகாரில் இருந்து மதுபானி கலை மற்றும் […]
IMG 20240629 WA0000 1 | ஹுனார் இந்திய நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் கலை கண்காட்சி துபாயில் திறக்கப்படுகிறது.<br>