தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்!
தமிழகத்தில் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான இடங்களை இறுதி செய்யுமாறு மாவட்ட நிா்வாகங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் 2022-ஆம் ஆண்டு 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதன்மூலம், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 36-ஆக அதிகரித்தது. இவை தவிர, 34 தனியாா் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், பெரம்பலூா், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் தலா ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது....