Sunday, December 22

தமிழ்நாடு

தமிழகம் வரும் 7 பேரின் உடல்கள்!

தமிழகம் வரும் 7 பேரின் உடல்கள்!

தமிழ்நாடு
குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல் கொச்சி விமான நிலையம் வந்தடைந்த நிலையில், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த 7 பேரின் உடல்களும் தமிழக ஆம்புலன்ஸ்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து இன்று காலை கொச்சி புறப்பட்டுச் சென்ற செஞ்சி மஸ்தான், தமிழகத்தை சேர்ந்தவர்களின் உடலைப் பெற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளை கண்காணித்து வருகிறார்.மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ள நிலையில், குவைத்தில் தீ விபத்தில் சிக்கி தமிழகத்தை சேர்ந்தவர்கள் சிகிச்சைப் பெற்று வருகிறார்களா என்பது குறித்து மத்திய அமைச்சகத்திடம் தகவல்கள் கேட்டுள்ளதாக அமைச்சர் மஸ்தான் தெரிவித்...
பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை……

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை……

தமிழ்நாடு
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு,இன்று ராணிப்பேட்டையில் நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.வருகிற 17-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கால்நடை வாரச் சந்தைகளில் ஆடு வளா்ப்பவா்களும், ஆட்டு வியாபாரிகளும் ஆயிரக்கணக்கான செம்மறி, வெள்ளாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஆட்டின் எடைக்கு ஏற்றவாறு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.இதில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.700-க்கு விற்பனையான 1 கிலோ ஆட்டுக்கறி, இந்த வாரம் ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை விலை உயர்ந்து விற்பனையாகிறது....

திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓட்டிய கைதி…….

தமிழ்நாடு
சிவகங்கை அருகே புரசடை உடைப்பு திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து  தப்பி ஓடிய கைதியை போலீசார் தேடிவருகின்றனர்.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் மகன் கோபால்(29). இவர்  கடந்த 2021 ஆம் ஆண்டில் சிறுமியை பாலியியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு கொலை  செய்ய முயற்சித்தது தொடர்பாக அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்  5 ஆண்டுகள் தண்டனை பெற்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புரசடை உடைப்பு திறந்தவெளி சிறைச் சாலையில்  அடைக்கப்பட்டிருந்தார். தண்டனை காலம் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில்,  திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து  தப்பி ஓடியதாக தகவல் இன்று (ஜுன் 14) அதிகாரிகளுக்கு தெரியவந்தது.தப்பி ஓடிய கைதியை போலீசார் தேடிவருகின்றனர்....
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு!

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு!

தமிழ்நாடு
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,2016 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.2016-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு,மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படியை 1.1.2024 முதல் 9 சதவீதமாக உயர்த்தி வழங்க தமிழக அரச உத்தரவிட்டுள்ளது. மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம், அகவிலை ஊதியத்தில் 239 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது....
நாளை TNPSC குரூப் 4 தேர்வு….

நாளை TNPSC குரூப் 4 தேர்வு….

தமிழ்நாடு
தமிழ்நாடு முழுவதும் நாளை (ஜூன் 9)  பல்வேறு மையங்களில் குரூப் 4 எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.  காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி தேர்வு நடைபெறும் உள்ளது.ஒரு மணி நேரத்திற்கு முன்தாகவே தேர்வுக் கூடத்துக்கு சென்றுவிட வேண்டும் என தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்பும் வகையில் தேர்வு நடைபெறயுள்ளது.ஆன்லைனில் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை பெறப்பட்டன. குரூப் 4 தேர்வுக்கான அடிப்படைக் கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், எம்ஃபில் முடித்தவர்கள் என உயர்கல்வி தகுதி பெற்றவர்கள் உட்பட சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒரு பணியிடத்திற்கு 320 பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்  தெரிவிக்கின்றன....
சிறுவனை கடித்த நாய்: உரிமையாளர் மீது வழக்கு பதிவு

சிறுவனை கடித்த நாய்: உரிமையாளர் மீது வழக்கு பதிவு

தமிழ்நாடு
சென்னை அருகே 12 வயது சிறுவனை ராட் வெய்லர் நாய் கடித்த நிலையில், உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொளத்தூா் ஆசிரியா் காலனி பகுதியைச் சோ்ந்த ஜெரால்டு (12) என்ற சிறுவன், சனிக்கிழமை தனது வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த பொழுது, அப்பகுதியில் இருந்த ‘ராட் வெய்லா்’ நாய் திடீரென சிறுவனை கடித்ததுசிறுவனின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு திரண்டு வந்த பொதுமக்கள் அந்த நாயை விரட்டினா். நாய் கடித்ததில் பலத்த காயமடைந்த ஜெரால்டை பொதுமக்கள் மீட்டு, அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இது தொடா்பாக கொளத்தூா் போலீசார் விசாரித்து வருகின்றனா். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் நாயின் உரிமையாளர் மீது இரு பிரிவுகளில் புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்....
124 ஆண்டுகளில் 7-ஆவது முறையாக அதிக மழை பதிவு!

124 ஆண்டுகளில் 7-ஆவது முறையாக அதிக மழை பதிவு!

தமிழ்நாடு
தமிழகத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் பல இடங்களில் வெப்பம் அதிகமாக இருந்ததுடன், வெப்ப அலையும் வீசியது. மே 4 ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. வெயில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் ‘ரீமெல்’ புயல் காரணமாக மே மாதம் முழுவதும் தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்தது. தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 200 மி.மீ. வரை மழை பதிவாகியது. இது மிக அதிக மழைப்பொழிவாகும். கடந்த 124 ஆண்டுகளில் மே மாதத்தில் அதிக மழை பதிவான 7 ஆவது வருடமாக இந்த ஆண்டு உருவாகியுள்ளது. 1943 ஆம் ஆண்டு மே மாதத்தில் 205.2 மி.மீ. மழை பதிவாகியது. இதற்குப் பிறகு, 1930 இல் 163.7 மி.மீ., 1972 இல் 149.4 மி.மீ., 1955 இல் 148 மி.மீ., 1995 இல் 142.5 மி.மீ., 2014 இல் 139.3 மி.மீ. மற்றும் இந்த ஆண்டில் (2024) 138.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த ஆண்டில், ...
கிருஷ்ணகிரி அருகே பேருந்து விபத்து 10-க்கும் மேற்பட்டோர் காயம்

கிருஷ்ணகிரி அருகே பேருந்து விபத்து 10-க்கும் மேற்பட்டோர் காயம்

தமிழ்நாடு
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே அரசு பொறியியல் கல்லூரி அருகே சென்ற மினிபஸ், தேசிய நெடுஞ்சாலையின் மையப் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தின் காரணமாக பயணிகள் அனைவரும் காயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....
தக்காளி விலை உயர்வு!

தக்காளி விலை உயர்வு!

தமிழ்நாடு
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் 5 மாதத்திற்கு பிறகு தக்காளி விலை கிலோ ரூ.60-ஐ எட்டியுள்ளது.சென்னை கோயம்பேடு சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.இந்த நிலையில், வழக்கமாக தினசரி 1200 டன்னுக்கு தக்காளி வரத்து இருந்த நிலையில், திங்கள்கிழமை 700 டன் மட்டுமே தக்காளி வந்தது. வரத்து குறைவால் தக்காளி விலையும் திடீரென உயா்ந்துள்ளது.இதன்படி, வெள்ளிக்கிழமை வரை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையான தக்காளி திங்கள்கிழமை கிலோ ஒன்று ரூ.60-ஐ எட்டியுள்ளது.இதனால், அடித்தட்டு மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். தக்காளி விலை உயர்வு 10 நாட்கள் வரை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்....
விமான நிலையத்துக்கு  வெடிகுண்டு மிரட்டல்

விமான நிலையத்துக்கு  வெடிகுண்டு மிரட்டல்

தமிழ்நாடு
சென்னை விமான நிலையத்துக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததுள்ளது. இதையடுத்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.இதில் ,வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே பள்ளிகள், மருத்துவமனைகள், விமான நிலையங்களுக்கு அடிக்கடி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்ந்து வருகிறது. இந்த மிரட்டலால் போலீசார்  முழு வீச்சில் தேடுதல் பணியில் ஈடுபடுகின்றனர். பிறகு அத்தகைய மிரட்டல்கள் வெறும் புரளி என கண்டறியப்படுகின்றன....