நாளை TNPSC குரூப் 4 தேர்வு….

tnpsc logo - நாளை TNPSC குரூப் 4 தேர்வு....

தமிழ்நாடு முழுவதும் நாளை (ஜூன் 9)  பல்வேறு மையங்களில் குரூப் 4 எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.  காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி தேர்வு நடைபெறும் உள்ளது.ஒரு மணி நேரத்திற்கு முன்தாகவே தேர்வுக் கூடத்துக்கு சென்றுவிட வேண்டும் என தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்பும் வகையில் தேர்வு நடைபெறயுள்ளது.
ஆன்லைனில் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை பெறப்பட்டன. குரூப் 4 தேர்வுக்கான அடிப்படைக் கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், எம்ஃபில் முடித்தவர்கள் என உயர்கல்வி தகுதி பெற்றவர்கள் உட்பட சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒரு பணியிடத்திற்கு 320 பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்  தெரிவிக்கின்றன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *