
சொத்துவரி உயர்வை எதிர்த்து அதிமுக மனித சங்கிலி போராட்டம்…
கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய செய்தவம் மாளிகையில் கோவை திருப்பூர் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், சொத்துவரி உயர்வை திரும்ப பெறுவதை வலியுறுத்தி மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அதிமுக அமைச்சரும் அதிமுக தலைமை கழக நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக ஆட்சியில் மாநகராட்சி பேரூராட்சி உள்ளிட்டவற்றில் வரி உயர்வை உயர்த்திவிட்டனர் கூடுதலாக 6% வரியை உயர்த்தி விட்டனர் அதனை செலுத்த தவறினால் ஒரு சதவிகிதம் வட்டி போடுவது என்ற மோசமான நிலையை உருவாக்கி இருக்கிறது என்றார். கொரோனாவுக்கு பிறகு தொழிலாளர்கள் அனைவர...