Saturday, November 15

“வாரிசு, ஊழல் அரசியலை தாங்க வலுவான இதயம் வேண்டும்: வானதி சீனிவாசன்”

உலக இருதய தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தனியார் மருத்துவமனை சார்பில் இருதய விழிப்புணர்வு நடைபயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்..

"வாரிசு, ஊழல் அரசியலை தாங்க வலுவான இதயம் வேண்டும்: வானதி சீனிவாசன்"
மாறி கொண்டு வரும் வாழ்க்கை பழக்கவழக்கங்கள் காரணமாக இதய நோய் ஏற்பட்டு மக்கள் உயிரிழக்கிறார்கள்.இதயத்தை பாதுகாக்கவும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்காக நிறைய பழக்க வழக்கங்களை மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.அதை கடைபிடிக்க வேண்டும் என்று சிறிய வயதில் இருந்தே குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டி இருக்கிறது.

தமிழ்நாடு அரசியலில் இன்று நடக்கும் வாரிசு அரசியலையும் ஊழல் அரசியலையும் தாங்க வேண்டும் என்றால் இதயத்தை வலுவாக வைத்திருக்க வேண்டும் என்பதால் இதயத்துக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து இருக்கின்றேன். துணை முதலமைச்சர் ஆக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளது தொடர்பான கேள்விக்கு இதயத்தை பலப்படுத்தி விட்டு வருகிறேன் என கூறி சென்றார்.

இதையும் படிக்க  'இரட்டை இலைக்கு மேலே தாமரை மலரும்' - கேபி ராமலிங்கம் விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *