முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து பொள்ளாச்சியில் திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
சட்டவிரோத பணம் பரிமாற்ற வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்தார் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்து உள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியதை அடுத்து கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சியில் நகர திமுக அலுவலகத்தில் ஏராளமான திமுகவினர் திரண்டனர் இதனைத் தொடர்ந்து நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் இருந்து தேர்நிலையம் வரை ஊர்வலமாக சென்று பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
இதில் நகர மன்ற தலைவர் சியாமளா துணைச் செயலாளர்கள் தர்மராஜ் நாச்சிமுத்து பாத்திமா தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் உற்சாகமாக வெடி வெடித்து கொண்டாடினர்.
Leave a Reply