விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது இதனை தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகர திமுக சார்பில் நகரச் செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
இதில் ஏராளமான தி.மு.கவினர் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி, செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை அமைச்சர் பதவி வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பினர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கலைஞர் துணை முதல்வர் பதவி வழங்கிய போது இது பதவி அல்ல பொறுப்பு என கூறிய வாசகத்தை இன்று துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ளார் அவர் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதும் இளைஞர்கள் திமுகவில் அதிகளவில் எழுச்சியோடு இணைந்து வருகின்றன்றனர் அந்த எழுச்சியின் காரணமாக தேர்தல் அவர் செல்லும் இடங்கள் எல்லாம் பொதுமக்கள் வரவேற்பு அளித்து வெற்றியைத் தேடித் தருகின்றனர் என நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்
Leave a Reply