Monday, December 30

வெளிநாடு

பெண்ணின் திருமண வயது 9 ஈராக்கில் மசோதா தாக்கல்…

பெண்ணின் திருமண வயது 9 ஈராக்கில் மசோதா தாக்கல்…

வெளிநாடு
ஈராக் நாடாளுமன்றம், பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை 9 ஆக குறைப்பதற்கான மசோதாவை அறிவித்துள்ளது, இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய ஈராக் தனிநபர் சட்டத்தின்படி, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதியமைச்சகம் இந்த சட்டத்தை மாற்றுவதற்காக புதிய மசோதாவை முன்மொழிந்துள்ளது. இந்த மசோதா 9 வயது சிறுமிகளுக்கும் 15 வயதான ஆண் குழந்தைகளுக்கும் திருமணத்தை அனுமதிக்கிறது. இஸ்லாமிய மதச்சட்டத்தை நிலைப்படுத்தவும், தகாத உறவுகளிலிருந்து இளம் பெண்களை பாதுகாக்கவும் திருமண வயது குறித்த புதிய மசோதா முயல்வதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த மசோதா குழந்தை திருமணத்தை ஊக்குவிக்கும் என்ற ஐயம் எழுந்துள்ளது. இது, குடும்ப விவகாரங்களில் நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைத்து, மதகுருமார்களின் செல்வாக்கை அதிகரிக்கும் என்பதால், பெண்களின் சொத்துரிமை, வாரிசுரிமை, மற்றும் வி...
இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தம் – ஏா் இந்தியா

இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தம் – ஏா் இந்தியா

வெளிநாடு
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தால், இந்தியா இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் நகருக்கான அனைத்து விமான சேவைகளையும் வெள்ளிக்கிழமை முதல் உடனடியாக நிறுத்துவதாக ஏா் இந்தியா அறிவித்துள்ளது. ஈரானில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்குப் பிறகு, ஈரான் இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி அளிக்கப்படும் என அறிவித்தது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உருவாகியுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் சில மத பயங்கரவாதக் குழுக்கள், அந்நாட்டு விமானங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏா் இந்தியா தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், “மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, டெல் அவிவ் நகருக்கான விமான சேவை உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை சேவை நிறுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் திரும்ப அளிக்...
தற்கொலை செய்து கொண்ட முதல் ரோபட்…

தற்கொலை செய்து கொண்ட முதல் ரோபட்…

இந்தியா, வெளிநாடு
தென் கொரியாவின் குமி நகர சபையில், அவர்களது  நிர்வாக அதிகார ரோபோட் படிக்கட்டுகளில் இருந்து தன்னைத் தானே கீழே தள்ளி செயலிழந்து போனதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை "ரோபோட் தற்கொலை" என்று உள்ளூர் ஊடகங்கள் கவலை தெரிவித்துள்ளன.நாள்தோறும் ஆவணங்களை வழங்குதல், நகரத்தைப் பற்றி மக்களிடம் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் தகவல்களை வழங்குதல் போன்ற பணிகளை இந்த ரோபோட் செய்து வந்ததாக நகர சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "இந்த கடின உழைப்பாளி அதிகாரி ஏன் இப்படி செய்தது?" என்று ஒரு உள்ளூர் ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது....
ஜப்பானில்  ஹோலோகிராபியை கொண்ட புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம்

ஜப்பானில்  ஹோலோகிராபியை கொண்ட புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம்

வெளிநாடு
• ஜப்பான் ஜூலை 3, 2024 அன்று புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது, இதில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியங்கள் 3Dயில் சுழலும் வகையில் இருக்கும். • புதிய ரூபாய் நோட்டுகளில் பார்வைக் குறைபாடுள்ள நபர்கள் தொட்டுணருவதன் மூலம் மதிப்பை அறிய தொட்டுணரக்கூடிய குறியீடுகள் அடங்கும். • மார்ச் 2025 இன் இறுதிக்குள் 7.5 பில்லியன் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படும், ஏற்கனவே உள்ள ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் செல்லுபடியாகும்....
பாகிஸ்தான் புதிய ராணுவ நடவடிக்கையைத் தொடங்குகிறது<br>அழ்ம்-ஏ-இஸ்தெஹ்காம்<br>

பாகிஸ்தான் புதிய ராணுவ நடவடிக்கையைத் தொடங்குகிறது
அழ்ம்-ஏ-இஸ்தெஹ்காம்

வெளிநாடு
• பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல்களால் ஏற்பட்ட வன்முறையையும் பயங்கரவாதத்தையும் எதிர்த்து போராட "அழ்ம்-ஏ-இஸ்தெஹ்காம்" என்ற நடவடிக்கையைத் தொடங்குகிறது.• இந்த நடவடிக்கை, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் முயற்சிகளை தீவிரப்படுத்தவும், பாதுகாப்பை மேம்படுத்தவும், தீவிரவாதத்தை எதிர்க்க சமூக பொருளாதார காரணிகளை மேம்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.• எல்லை கடந்த பதற்றங்களையும் பிராந்திய நிலைத்தன்மைக்கான பாதிப்புகளையும் பற்றிய கவலைகள், நடவடிக்கையின் இலக்குகளின் மையமாகும்....
யுனெஸ்கோவின் முதல் இளைஞர் நலனுக்கான தூதர்கள்…..

யுனெஸ்கோவின் முதல் இளைஞர் நலனுக்கான தூதர்கள்…..

வெளிநாடு
SEVENTEEN யுனெஸ்கோவின் முதல் இளையர் நலனுக்கான நற்பெயர் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.பாரிசில் உள்ள தலைமையகத்தில் SEVENTEEN இளையர் நலனுக்கான நற்பெயர் தூதர்களாக சத்தியப்பிரமாணம் செய்தனர்.அவர்கள் உலகளாவிய இளையர் நிதி திட்டத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளிக்க உறுதி தெரிவித்தனர், இது உலகளாவிய இளையர் உரிமையை வலியுறுத்துகிறது.SEVENTEEN தங்கள் #ஒன்றாக_போகும் (Going Together) பிரச்சாரத்தின் மூலம் உடன்பாடு மற்றும் ஆதரவை முன்னெடுக்க முயலுகின்றனர், இது ஒற்றுமையையும் ஆதரவையும் உலகம் முழுவதும் ஊக்குவிக்கிறது. யுனெஸ்கோ தலைமை இயக்குநர்: ஆட்ரி அசுலே....
45 இந்தியா்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது…..

45 இந்தியா்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது…..

வெளிநாடு
குவைத்தில் ஏற்பட்ட பயங்கமான தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில் 45 இந்தியா்கள், 3 பிலிப்பின்ஸ் நாட்டை சார்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று(ஜுன் 13) தெரிவித்தனர்.உயிரிழந்த இந்தியா்களின் உடல்கள் இன்று (ஜுன் 14) இந்தியா கொண்டுவரப்பட உள்ளன.உயிரிழந்தவா்களில் பெரும்பாலானோா் உடல் கருகியும், சிலா் கரும்புகை காரணமாக சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறியும் உயிரிழந்தனா். இதன் காரணமாக உயிரிழந்தவா்களின் உடல்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டது.அடையாளம் காணப்பட்ட 45 இந்தியா்களில் 24 போ் கேரளத்தையும், 7 போ் தமிழகத்தையும் சோ்ந்தவா்கள் என்று தெரியவந்துள்ளது.சா்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்தையடுத்து, குவைத் நகரின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அந்நாட்டு அரசு ஆய்வு மேற்கொள்ள தொடங்கியுள்ளது. ஆய்வில் கண்டறியப்படும் அனைத்து சட்டவிரோ...
குவைத் தீ விபத்து: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

குவைத் தீ விபத்து: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

வெளிநாடு
குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், குவைத் நாட்டின் மெங்காஃப்  நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று (ஜுன் 12) ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்....
குவைத் தீ விபத்து…….

குவைத் தீ விபத்து…….

வெளிநாடு
குவைத்தின் மெங்காஃப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (ஜுன் 13) ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் இந்தியாவை சார்ந்த 42 பேர் உயிரிழந்த நிலையில், தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய சுமாா் 200 போ் வசித்து வந்த நிலையில்,6-ஆவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 49 பேர் பலியாகினர். இதில், 42 பேர் இந்தியர்கள் ஆவர்.மேலும், விபத்தில் உயிரிழந்தவா்களில் பெரும்பாலானோா் 20 முதல் 50 வயது வரையிலான இந்தியா்கள் என்றும் அவா்கள் தமிழ்நாடு, கேரளம் மற்றும் வட இந்தியாவைச் சோ்ந்தவா்கள் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், தனதுX தளத்தில் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் எண்களை இந்தியாவிற்குள்: +91 1800 309 3793, வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901 தொடர்பு க...
ரஷ்யாவிற்கு எதிராக “Drone Wall”

ரஷ்யாவிற்கு எதிராக “Drone Wall”

வெளிநாடு
ஆறு நாட்டோ நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக 'Drone சுவர்' ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளன. • தங்களை ரஷ்யாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள "drone சுவர்" ஐ உருவாக்க ஆறு நாட்டோ நாடுகள் ஒன்றுபட்டு வருகின்றன. • ரஷ்ய அச்சுறுத்தல்கள் மற்றும் கடத்தல் முயற்சிகளுக்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ஒருங்கிணைந்த முறையை கலந்து பின்லேண்ட் (Finland), நார்வே (Norway), போலாந்து,(Poland), எஸ்டோனியா (Estonia), லட்வா(Latvia), மற்றும் லித்துணியா (Lithuania) ஆகிய நாடுகள் ஒன்று கூடி முடிவெடுத்துள்ளனர். • நாட்டோ அமைப்பு: நிறுவப்பட்ட நாள்: 4 ஏப்ரல் 1949 • தலைமை இடம்: பிரசெல்ஸ், பெல்ஜியம் • உறுப்பினர்கள்: 32 உறுப்பு நாடுகள் - 30 ஐரோப்பிய மற்றும் 2 வட அமெரிக்க...