45 இந்தியா்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது…..

Smoke billows after a fire broke out in a building 1718249957390 1718286458403 - 45 இந்தியா்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது.....


குவைத்தில் ஏற்பட்ட பயங்கமான தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில் 45 இந்தியா்கள், 3 பிலிப்பின்ஸ் நாட்டை சார்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று(ஜுன் 13) தெரிவித்தனர்.உயிரிழந்த இந்தியா்களின் உடல்கள் இன்று (ஜுன் 14) இந்தியா கொண்டுவரப்பட உள்ளன.
உயிரிழந்தவா்களில் பெரும்பாலானோா் உடல் கருகியும், சிலா் கரும்புகை காரணமாக சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறியும் உயிரிழந்தனா். இதன் காரணமாக உயிரிழந்தவா்களின் உடல்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டது.அடையாளம் காணப்பட்ட 45 இந்தியா்களில் 24 போ் கேரளத்தையும், 7 போ் தமிழகத்தையும் சோ்ந்தவா்கள் என்று தெரியவந்துள்ளது.சா்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்தையடுத்து, குவைத் நகரின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அந்நாட்டு அரசு ஆய்வு மேற்கொள்ள தொடங்கியுள்ளது. ஆய்வில் கண்டறியப்படும் அனைத்து சட்டவிரோத கட்டுமானங்கள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குவைத் அரசு உறுதியளித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *