
தென் கொரியாவின் குமி நகர சபையில், அவர்களது நிர்வாக அதிகார ரோபோட் படிக்கட்டுகளில் இருந்து தன்னைத் தானே கீழே தள்ளி செயலிழந்து போனதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை “ரோபோட் தற்கொலை” என்று உள்ளூர் ஊடகங்கள் கவலை தெரிவித்துள்ளன.
நாள்தோறும் ஆவணங்களை வழங்குதல், நகரத்தைப் பற்றி மக்களிடம் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் தகவல்களை வழங்குதல் போன்ற பணிகளை இந்த ரோபோட் செய்து வந்ததாக நகர சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “இந்த கடின உழைப்பாளி அதிகாரி ஏன் இப்படி செய்தது?” என்று ஒரு உள்ளூர் ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது.