சில்வர் லைன் கேன்சர் மற்றும் ஹெல்த் கேர் டிரஸ்ட் சார்பில்புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான வெற்றியாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது!

img 20240616 wa0065481928359881971143 - சில்வர் லைன் கேன்சர் மற்றும் ஹெல்த் கேர் டிரஸ்ட் சார்பில்புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான வெற்றியாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது!

திருச்சி சில்வர் லைன் புற்றுநோய் மருத்துவமனை ஏற்பாட்டில் ஆண்டு தோறும் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான வெற்றியாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகி தொடர் சிகிச்சை முறைகள் மூலம் எவ்வாறு மீண்டனர் என்று நம்பிக்கை தரும் விதமாக நேரடியாக வழங்கி வருகின்றனர்.
அதேபோல் இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி திருச்சி சாஸ்திரி சாலையில் உள்ள இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் அரங்கில் நடைபெற்றது. சில்வர் லைன் புற்றுநோய் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கிராமாலயா நிறுவனர் பத்மஸ்ரீ தாமோதரன்,
ஐ எம் ஏ முன்னாள் தேசிய துணை தலைவர் டாக்டர் அஷ்ரப், ஜமால் முகமது கல்லூரி கல்வி குழுமத்தின் இயக்குனர் ஜமால் முகமது ஜாபர், ஆர்த்தோ கேர் நிர்வாக இயக்குனர் முகேஷ் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளர் மோகனசுந்தரம், கின்னஸ் சாதனையாளர் டான்சென் மற்றும் விஜய் டிவி கலைக்குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் சில்வர் லைன் ஹெல்த் கேர் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் செந்தில் குமார், டிரஸ்டி கணேசன், மருத்துவர்கள் ஹேமலதா, நரேந்திரன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியில் நடைபெற்ற அனுபவப் பகிர்வில் புற்றுநோய் சிகிச்சை பெற்று எழுச்சி பெற்ற கேன்சர் நோயாளிகள் பலரும் குடும்பத்துடன் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இதையும் படிக்க  பாராசிட்டமல் உட்பட 156 மருந்துகளுக்கு தடை... மத்திய அரசு அதிரடி
img 20240616 wa00661361961731723359868 - சில்வர் லைன் கேன்சர் மற்றும் ஹெல்த் கேர் டிரஸ்ட் சார்பில்புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான வெற்றியாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது!


நிர்வாக இயக்குனர் மற்றும் டாக்டர் செந்தில்குமார் பேசும்பொழுது பல ஆண்டுகால கடும் உழைப்பை செலுத்தி அர்ப்பணிப்போடு பணியாற்றிய அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பலரின் கூட்டுழைப்பும், அறிவியல் புரட்சியும் வியத்தகு மாற்றங்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
புற்றுநோய் தாக்கத்திற்கு ஆளாகிவிட்டோமே என்ற நோயாளியின் மனக்கவலையும், அவரது குடும்பத்தினரின் போதுமான ஆதரவு இல்லாத சூழலும் தான் இன்னும் தீர்வு கான முடியாத சிக்கலாக நீடிக்கிறது. மருத்துவத் துறையில் வெள்ளமென பாய்ச்சப்பட்ட புதிய கண்டுபிடிப்புகளும் துறை சார் மருத்துவரின் பங்களிப்போடு சிறந்த முறையில் பல மேம்பாடுகளை கண்டிருக்கிறது. மன தைரியத்துடன் தொடர் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் வெற்றிகரமாக புற்றுநோயிலிருந்து மீண்டு விடலாம் கடந்த 10 ஆண்டுகளில் பல நூறு பேர் புற்றுநோயிலிருந்து மீண்டு இருக்கின்றனர். புதுவாழ்வை தொடங்கி இருக்கின்றனர். அவசியமற்ற அச்சம்தான் புற்றுநோய் எதிர்கொள்வதில் முதல் தடையாக அமைந்திருக்கிறது.

img 20240616 wa00645680771045110367392 - சில்வர் லைன் கேன்சர் மற்றும் ஹெல்த் கேர் டிரஸ்ட் சார்பில்புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான வெற்றியாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது!


அத்தடையை தாண்டினால் மட்டுமே முழுமையான தீர்வை வழங்கக்கூடிய தொடர் மருத்துவ சிகிச்சை முறைகள் கைக்கூடும். கேன்சர் நோயின் கொடுமைகளுக்கு ஆளாகி அந்நோயிலிருந்து மீண்டு வர வழி தெரியாமல் உழலும் நோயாளிகளுக்கு மன வலிமையை வழங்கும் விதமாக சில்வர் லைன் மருத்துவக் குழுவின் தொடர் மருத்துவ சிகிச்சை முறைகளும் மற்றும் இதுபோல நிகழ்ச்சிகளும் பேருதவி செய்யும் என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கள்ளச்சாராயத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33-ஆக உயர்வு! 

Thu Jun 20 , 2024
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33-ஆக அதிகரித்துள்ளது.கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்தவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி விழுந்தனர்.தொடர்ந்து, புதன்கிழமை காலையும் பலர் கள்ளச்சாராயம் அருந்திவிட்டு மயங்கிய நிலையில், அவர்களுக்கு பார்வை மங்கியதுடன், நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி ஏற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதேபோல, கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரி பகுதியிலும் கள்ளச்சாராயம் அருந்திய […]

You May Like