Thursday, July 31

தமிழ்நாடு

விரிவடையும் சென்னை மாநகராட்சி

விரிவடையும் சென்னை மாநகராட்சி

தமிழ்நாடு
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுடன் புறநகரில் உள்ள 50 ஊராட்சிகளை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தற்போது, சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன.இந்த நிலையில், திருப்போரூர், மாதவரம், பொன்னேரி பகுதிகளில் உள்ள 50 ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் சேர்க்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.இதன்மூலம் விரைவில் சென்னை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 250-ஆகவும், மண்டலங்களின் எண்ணிக்கை 20-ஆகவும் உயரவுள்ளது.இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்தாண்டு இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது....
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

தமிழ்நாடு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகாததால் வழக்கின் விசாரணை ஒத்திவைக்க அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது. வழக்கை நாளை விசாரிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அமலாக்கத்துறை தரப்பு வாதங்களைக் கேட்காமல் வழக்கை விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணை ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது....
சென்னை மெட்ரோ சேவை இன்று ரத்து!

சென்னை மெட்ரோ சேவை இன்று ரத்து!

தமிழ்நாடு
சென்னை சென்ட்ரல் மற்றும் விமான நிலையத்துக்கு இடையே இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை இன்று(மே 15) நாள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள படுவதால் சென்னை சென்ட்ரல், தேனாம்பேட்டை வழியாக விமான நிலையத்துக்கு இயக்கப்படும் நேரடி ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்று பச்சை வழித்தடத்தில் மாரி பயணம் மேற்கொள்ளலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது....
எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!

எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!

தமிழ்நாடு
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி இன்று நேரில் ஆஜரானார்.இந்த வழக்கின் விசாரணை ஜூன் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார். தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 95 சதவிதத்துக்கு மேல் செலவு செய்துள்ளதாக தெரிவித்த தயாநிதி மாறன்,வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.இந்த வழக்கில் நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமி வருகை தந்த நிலையில், காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்....
திமுக நிர்வாகி வெட்டிக் கொலை

திமுக நிர்வாகி வெட்டிக் கொலை

தமிழ்நாடு
தஞ்சாவூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணனின் அக்கா மகனும், திருவிடைமருதூர் திமுக நிர்வாகியுமான கலைவாணன் வெட்டிக்கொலை.கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ நேற்று நள்ளிரவில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை‌ செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பகுதி நெய்குன்னம் கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி மகன் கலைவாணன் (30). நிதிநிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவர் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு நேற்று (மே12)  நள்ளிரவு 12 மணியளவில் வயலுக்கு சென்றார். அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் கலைவாணனை வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதனால் பலத்த காயமடைந்த கலைவாணன் சம்பவவிடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் ச...
சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு மழை!

சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு மழை!

தமிழ்நாடு
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (மே 13) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு  வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில்  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி  உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
ஜவுளி கடையில் தீ விபத்து

ஜவுளி கடையில் தீ விபத்து

தமிழ்நாடு
திருப்பூர் மாவட்டம், அவிநாசி மேற்கு ரத வீதியில்  உள்ள ஜவுளி கடையில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.  3 அடுக்குகள் கொண்ட இக்கடையில் 30க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல கடையை பூட்டி சென்றுள்ளனர். திங்கள்கிழமை அதிகாலை திடீரென பூட்டிருந்த கடைக்குள் இருந்து கரும்புகை வெளியேறத் தொடங்கி உள்ளது. இதை அறிந்த பொதுமக்கள்,  தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு  வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினர், தீயை நீண்ட நேரம் போராடி அனைத்தனர்.இருப்பினும் முதல் தளத்திலிருந்த பல லட்சம் மதிப்பிலான  ஜவுளி வகைகள் முற்றிலும் எரிந்து சேதமானது. சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அவிநாசியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட...
திருப்பதி செல்வோர் கவனத்திற்கு…..

திருப்பதி செல்வோர் கவனத்திற்கு…..

தமிழ்நாடு
ஆகஸ்ட் மாதத்துக்கான தரிசனம், தங்குமிடம் மற்றும் தன்னாா்வ சேவைக்கான ஆன்லைன் ஒதுக்கீட்டை திருமலை திருப்பதி தேவஸ்தானம்  இணையத்தில் வெளியிடுகிறது.ஏழுமலையான் ஆா்ஜித சேவை  டிக்கெட்டுகளின் மின்னணு பதிவு மே 18- ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மே 20 -ஆம் தேதி காலை 10 மணி வரை நடைபெறவுள்ளது.  ஆா்ஜித சேவை  டிக்கெட்டுகளின் எலக்ட்ரானிக் குலுக்கல் கட்டணம் மே 20 முதல் மே 22 வரை (மதியம் 12 மணி வரை) செலுத்தி டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.ஏழுமலையான் ஆா்ஜித சேவை  டிக்கெட்டுகள்  மே 21 காலை 10 மணி முதல், விா்ச்சுவல் சேவை டிக்கெட்டுகள் அதே நாளில் பிற்பகல் 3 மணி வரை முன்பதிவில் வைக்கப்பட உள்ளது. மூத்த குடிமக்கள்/மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு கிடைக்கும் மே 23 மாலை 3 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.சிறப்பு நுழைவு தரிசனம் (ரூ.300) டிக்கெட்டுகள் மே 24- ஆம் தேதி காலை 10 மணிக்கு கிடைக்கும்...
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில்  மழை!

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில்  மழை!

தமிழ்நாடு
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மே12 முதல் மே 15 வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சென்னையில் மே 12,13 தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்ததல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது....
சிவகாசி அருகே மீண்டும் வெடிவிபத்து!

சிவகாசி அருகே மீண்டும் வெடிவிபத்து!

தமிழ்நாடு
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 அறைகள் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் புதூரில் காத்தநாடார் தெருவைச் சேர்ந்த ராஜாராம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது .இந்த நிலையில் ஆலையில் காலை 6.15 மணியளவில் வெடி மருந்து மூலப்பொருள்கள் வைத்திருக்கும் அரையில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் ஐந்தாவது முறையாகப் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழந்துள்ளது....