Tuesday, July 8

திமுக நிர்வாகி வெட்டிக் கொலை

தஞ்சாவூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணனின் அக்கா மகனும், திருவிடைமருதூர் திமுக நிர்வாகியுமான கலைவாணன் வெட்டிக்கொலை.கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ நேற்று நள்ளிரவில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை‌ செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பகுதி நெய்குன்னம் கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி மகன் கலைவாணன் (30). நிதிநிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவர் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு நேற்று (மே12)  நள்ளிரவு 12 மணியளவில் வயலுக்கு சென்றார். அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் கலைவாணனை வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதனால் பலத்த காயமடைந்த கலைவாணன் சம்பவவிடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த வந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதையும் படிக்க  மகளிர் காவலர்களுக்கு புதிய சலுகை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *