திருப்பதி செல்வோர் கவனத்திற்கு…..

Balaji - திருப்பதி செல்வோர் கவனத்திற்கு.....

ஆகஸ்ட் மாதத்துக்கான தரிசனம், தங்குமிடம் மற்றும் தன்னாா்வ சேவைக்கான ஆன்லைன் ஒதுக்கீட்டை திருமலை திருப்பதி தேவஸ்தானம்  இணையத்தில் வெளியிடுகிறது.
ஏழுமலையான் ஆா்ஜித சேவை  டிக்கெட்டுகளின் மின்னணு பதிவு மே 18- ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மே 20 -ஆம் தேதி காலை 10 மணி வரை நடைபெறவுள்ளது.  ஆா்ஜித சேவை  டிக்கெட்டுகளின் எலக்ட்ரானிக் குலுக்கல் கட்டணம் மே 20 முதல் மே 22 வரை (மதியம் 12 மணி வரை) செலுத்தி டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.
ஏழுமலையான் ஆா்ஜித சேவை  டிக்கெட்டுகள்  மே 21 காலை 10 மணி முதல், விா்ச்சுவல் சேவை டிக்கெட்டுகள் அதே நாளில் பிற்பகல் 3 மணி வரை முன்பதிவில் வைக்கப்பட உள்ளது.
மூத்த குடிமக்கள்/மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு கிடைக்கும் மே 23 மாலை 3 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.சிறப்பு நுழைவு தரிசனம் (ரூ.300) டிக்கெட்டுகள் மே 24- ஆம் தேதி காலை 10 மணிக்கு கிடைக்கும்.திருமலை- திருப்பதி வாடகை அறைக்கான ஒதுக்கீடு மே 24 மாலை 3 மணி முதல் தொடங்க உள்ளது. திருமலை மற்றும் திருப்பதிக்கான ஸ்ரீவாரி சேவா தன்னாா்வ சேவை பொது ஒதுக்கீடு மே 27 அன்று காலை 11 மணிக்கும், நவநீத சேவை மதியம் 12 மணிக்கும், பரகாமணி சேவை 1 மணிக்கும் வெளியிடப்படும்.https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று  தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க  பொள்ளாச்சியில் 10 லாரிகள் பறிமுதல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts