
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகாததால் வழக்கின் விசாரணை ஒத்திவைக்க அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது. வழக்கை நாளை விசாரிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அமலாக்கத்துறை தரப்பு வாதங்களைக் கேட்காமல் வழக்கை விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணை ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.