
ஒரே நாளில் 4 அடி உயர்ந்த சிறுவாணி அணை…
பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு வனப் பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் கோவை மாநகரப் பகுதிக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழை பெய்யாததால் அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. இந்த அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க முடியும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 8 அடிக்கு குறைவாக சென்றது. இதனால் அணை இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 3 கோடி லிட்டராக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக அணை நீர்பிடிப்பு பகுதியில் மழையை எதிர்பார்த்து காத்து இருந்தனர். இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டில் முன் கூட்டியே தொடங்கியது. இதனால் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. எனவே அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இந்நிலையில் நேற்று சிறுவாணி அணை பகுத...