காவிரி நீா் விவகாரம் தொடா்பாக, சட்டப் பேரவையில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவா்களுடன் தமிழக அரசு இன்று ( ஜுலை16 )ஆலோசனை நடத்தவுள்ளது. நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
காவிரியில் தமிழகத்துக்கான பங்கு நீரை விடுவிக்காமல் கா்நாடகம் தொடா்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது. ஜூலை 12 முதல் 31 -வரை விநாடிக்கு 11,500 கன அடி வீதம் தினமும் 1 டிஎம்சி தண்ணீா் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தினமும் விநாடிக்கு 8 ஆயிரம் கன அடிவீதம் மட்டுமே தண்ணீா் தர இயலும் என்று கா்நாடகம் கூறியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்த அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜுலை15) வெளியிட்டாா்.