கலைஞர் கருணாநிதிக்கு ரூ.100 சிறப்பு நாணயம்…

karunanidhi coin - கலைஞர் கருணாநிதிக்கு ரூ.100 சிறப்பு நாணயம்...

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி அவர்களுக்கு நினைவாக ஒரு ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு விரும்பியது. இதற்காக மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக அரசு கடந்த வருடம் கோரிக்கை வைத்தது.

இந்த நினைவு நாணயத்தை, கலைஞர் கருணாநிதியின் நூற்றாவது பிறந்தநாளான கடந்த ஜூன் 3-ல் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், சில காரணங்களால், அந்நாளில் நாணயத்தை வெளியிட முடியவில்லை.

சமீபத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நாணயத்திற்கான அனுமதி கோப்பில் கையொப்பமிட்டதாக தகவல் வெளியானது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பெயரில் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி வழங்கியது.

ஆங்கிலம் மற்றும் இந்தியில் கருணாநிதியின் பெயருடன் “தமிழ் வெல்லும்” என்ற வாசகம் இந்த நாணயத்தில் இடம்பெற உள்ளது. இதற்கான உத்தரவு விரைவில் மத்திய அரசின் அரசிதழில் வெளியாகும், எனவும், இதற்கான மாதிரி வடிவத்தை தமிழக அரசு வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டது.

கலைஞர் நூற்றாண்டையொட்டி ரூ.100 மதிப்பிலான நினைவு நாணயம் வெளியிடுவதற்கான அரசாணை மத்திய அரசின் அரசிதழில் வெளியானது.

நாணயத்தின் ஒரு பக்கத்தில் “முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாள் நூற்றாண்டு 1924 – 2024” என்று அச்சிடப்பட்டு, மறுபுறத்தில் தேசிய நினைவுச் சின்னத்துடன் ரூ.100 என அதன் மதிப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  கள்ளச்சாராய மரணம் 49 ஆக உயர்வு….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *