கர்நாடகா அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் !



திருத்துறைப்பூண்டியில் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து300  மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்


காவிரி டெல்டா பாசனம்  மற்றும் குடிநீருக்கும் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் ஒன்றிய அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் தற்போது ரயில் மறியல் போராட்டம்  நடைபெற்று வருகிறது
குறிப்பாக கர்நாடக அணைகளில் 250 டிஎம்சி தண்ணீர் நிரம்ப இருந்தும் தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் கூட திறக்க மறுத்து அதற்கு ஆதாரமாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ள கர்நாடக அரசு கண்டித்தும்
கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட ஒன்றிய அரசு அறிவுறுத்திட வேண்டும்
தமிழக அரசு அனைத்து கட்சி மற்றும் விவசாய சங்கங்களை உடனடியாக கூட்டி பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தற்போது இந்த ரயில் மறியல் போராட்டமானது நடைபெற்று வருகிறது இந்த ரயில் மறியல் போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்
மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஒரே நாளில் 4 அடி உயர்ந்த சிறுவாணி அணை...

Tue Jul 16 , 2024
பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு வனப் பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் கோவை மாநகரப் பகுதிக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழை பெய்யாததால் அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. இந்த அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க முடியும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அணையின் […]
201709181820229449 Heavy rain in coimbatore Full range of siruvani dam water SECVPF | ஒரே நாளில் 4 அடி உயர்ந்த சிறுவாணி அணை...