Tuesday, January 21

இளவரசன் கொலை வழக்கு

திருச்சி உறையூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரை என்கிற துரைசாமி(42). ரவுடியான துரை மீது திருச்சியைச் சேர்ந்த இளவரசன் கொலை வழக்கு உள்பட5 கொலை வழக்குள் உள்பட திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 64 க்கும் மேற்பட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் புதுக்கோட்டை- திருச்சி மெயின்ரோட்டில் வம்பன் காட்டுப்பகுதியில் துரை பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையிலான போலீசார் இன்று மாலை அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அரிவாளால் வெட்ட முயன்ற துரையை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

இதையும் படிக்க  பவதாரணி திருஉருவ படத்திற்கு மரியாதை - விசிக தலைவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *