ஒற்றை விரலால் ஓங்கி அடித்து அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்சாரம்! திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் கருப்பையா தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மேட்டுப்பட்டி, ஆட்டாங்குடி, அகரப்பட்டி, கடப்பகார சத்திரம், கருவேப்பிலான்கேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முதற்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக முன்னாள் […]

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். கடந்த திங்கள் கிழமை வேட்புமனு தாக்கல் செய்த பாரிவேந்தர், தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாரிவேந்தர் நாளை முதல் சுற்றுப்பயணம் செய்யும் இடங்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில்… […]

திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான கே.என். ராமஜெயத்தின் 12ம் ஆண்டு நினைவு தினமான இன்று, திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதில் துரை வைகோ கலந்துகொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என். நேரு, பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு மற்றும் தி.மு.கழக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், […]

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், முன்னாள் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் மக்களுக்கு செய்த நற்பணிகள்! ஏழ்மை குடும்பத்தில் பிறந்து, சாதாரண ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று பல கல்வி நிறுவனங்களை உருவாக்கியுள்ளவர் டாக்டர் பாரிவேந்தர். கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரான பாரிவேந்தர். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பெரம்பலூர் தொகுதிக்கு பல நன்மைகளை […]

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பூனாம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்தார். அதன்பின் அவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.இதனைத்தொடர்ந்து அய்யம்பாளையம், திருவெள்ளறை, திருப்பைஞ் சீலி, சிறுகாம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பாரிவேந்தர் சென்று […]

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக கருப்பையா அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்சி பாலக்கரை மீனாட்சி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி ப.குமார், அமைப்பு செயலாளர் மனோகரன், மாநகர் மாவட்ட செயலாளர் […]

நாட்டின் 18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு, வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில் […]

மநீம தலைவர் கமல்ஹாசன், வரும் மார்ச் 29-ம் தேதி ஈரோட்டில் இருந்து திமுக கூட்டணியை ஆதரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கி ஏப்ரல்-16-ம் தேதி பொள்ளாச்சியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

திருச்சியில் அதிமுக தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அதிமுக கூட்டணி தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தி பேசியதாவது. இந்த தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. – திமுக இடையே தான் போட்டி. மதுரை எய்ம்ஸ் கல்லை நாடாளுமன்றத்தில் காட்டி அழுத்தம் கொடுக்க வேண்டும். 38 பிரதிநிதிகள் ஐந்து ஆண்டுகளாக என்ன செய்தார்கள்? நீட் […]

ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை விலகியுள்ளனர். எஸ் ஷர்மிளா ரெட்டி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். வரவிருக்கும் ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிட மற்றொரு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவர்கள் ஆளும் கட்சியிலிருந்து வெளியேறினர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சிந்தல்புடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வுன்னமட்லா எலிசா (63), கூடூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆந்திர மாநில காங்கிரஸ் […]