உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நாகை எம்.பி. செல்வராஜ் இன்று அதிகாலை காலமானார். இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில்,
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினருமான செல்வராஜ் மறைவு செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.இவர்,நான்கு முறை நாகை மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றியவர்.டெல்டா மாவட்டங்களுக்கு ரயில்வே திட்டங்கள் வேண்டியும், அப்பகுதி வேளாண் பெருங்குடி மக்களின் உரிமைகளுக்காகவும் பல போராட்டங்களை இவர் முன்னெடுத்துள்ளார்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், நாகை தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
Follow Us
Recent Posts
-
பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுக சார்பில் மரியாதை, நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது….
-
பொள்ளாச்சியில் கல்வியை இடைநிறுத்திய மாணவர்களுக்கு மீண்டும் உயர்கல்வி வாய்ப்பு: நகரமன்றத்தின் சிறப்பு அழைப்பு….
-
தடகள வீரர்களுக்கு திருச்சியில் மாற்றம் அமைப்பு சார்பில் பாராட்டு விழா !
-
மது, ஆபாசம், ஒழுக்கக் கேடுகளிலிருந்து மக்களை காப்போம்: திருச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் விழிப்புணர்வு மனித சங்கிலி
-
திருச்சியில் போயர் சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா…
Leave a Reply