உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல் செய்தார். வாரணாசி தொதியில் அவர் தொடர்ந்து 3-ஆவது முறையாகப் போட்டியிட உள்ள நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் கால பைரவர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு மேற்கொண்டார். 2014 மக்களவைத் தோ்தலில் வாரணாசி தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிட்ட மோடி 5.81 லட்சம் வாக்குகள் பெற்றாா்.
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் 7வது மற்றும் இறுதி கட்டமாக ஜூன் 1- வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.