உத்தரப் பிரதேச முதல்வர் பதவியில் இருந்து யோகி ஆதித்யநாத் அடுத்த 3 மாதங்களில் நீக்கப்படுவார் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுடன், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது,”இந்தியா’ கூட்டணிக்கு வாக்கு கேட்டு உத்தர பிரதேசத்துக்கு வந்துள்ளேன். தற்போதைய நிலவரப்படி பாஜக 220-க்கும் குறைவான இடங்களையே பெறும். பாஜக மீண்டும் ஆட்சி அமைக்காது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறது.” எனத் தெரிவித்தார்.பாஜக விதிமுறைப்படி, 75 வயதானால் பதவியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேசத்தில் வருகின்ற 20-ஆம் தேதி முக்கிய தொகுதிகளான ரேபரேலி, அமேதி உள்ளிட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அரவிந்த் கேஜரிவால் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.