திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் பகுதியில் தனியார் பள்ளி வாகன ஓட்டுனர் சேமலையப்பன் நேற்று முன்தினம் 20 மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற பொழுது மாரடைப்பால் உயிரிழந்தார் உயிரிழக்கும் தருவாயிலும் வாகனத்தை சாலையோரம் நிறுத்தி 20 மாணவர்களின் உயிரை காப்பாற்றினார் இதனை பாராட்டி தமிழக முதல்வர் அவருக்கு இரங்கல் தெரிவித்ததுடன் 5 லட்சம் நிதியை வழங்க உத்தரவிட்டிருந்தார் அதன்படி இன்று தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் சேமலையப்பன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார் அதில் மூத்த மகன் சந்துரு 2 லட்சம் இளைய மகன் வசந்தத்திற்கு இரண்டு லட்சம் மற்றும் அவரது பெற்றோர் சுபனுக்கு ஒரு லட்சம் என ஐந்து லட்சத்திற்கான காசோலை பிரித்து வழங்கப்பட்டது.
Next Post
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீஸ் லிமிடெட் சார்பில் நடைபெற உள்ள ANTHE - 2024 தேர்வுகள் அக்டோபர் மாதம் தொடக்கம்!...
Sat Jul 27 , 2024
You May Like
-
6 months ago
குற்றால அருவிகளில் குளிக்க தடை
-
6 months ago
மேகமலை அருவிக்கு செல்ல தடை