சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கலங்கரை விளக்கத்தில் (லைட் ஹவுஸ்) புதிய ரேடார் கருவி மாற்றப்பட்டுள்ளது. 1976 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மெரினா லைட் ஹவுஸ், சுமார் 150 அடி உயரம் கொண்டது. இந்த லைட் ஹவுஸ், கடலோர பாதுகாப்பு மற்றும் பரந்த கடல் பகுதிகளை கண்காணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த சில நாட்களாக, கலங்கரை விளக்கத்தில் இருந்த 46 மீட்டர் நீள ரேடார் கருவி பழுதாகியிருந்தது. […]

திருப்பூர் மணியக்காரம்பாளையம் பகுதியில் இயங்கும் தனியார் பனியன் நிறுவனத்தில் சனிக்கிழமை காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென நிறுவனம் முழுவதும் பரவி எரிய தொடங்கியது. தகவலறிந்ததும், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இரண்டு மணி நேரத்திற்கு மேல் போராடி வருகின்றனர். தீ விபத்தின்போது, அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அவசரமாக வெளியேறியதால், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை […]

தேசிய நெடுஞ்சாலை அமைப்பில் மத்திய அரசு புதிய வளர்ச்சிகளை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது, சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலை 40 இல், 28 கி.மீ. தொலைவிற்கு ரூ.1,338 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: சாலை அமைப்பு: இந்த 4-வழிச் சாலை இருபுறமும் 2-வழிச் சேவை சாலைகளுடன் அமைய உள்ளது. புறவழிச்சாலை: வாலாஜாபேட்டை – ராணிப்பேட்டை இடையே […]

என் ஜி பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 11ஆம் ஆண்டு தமிழ் அறிஞர்களுக்கான விருது வழங்கும் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா .. கோவை மாவட்டம் காளபட்டியில் உள்ள டாக்டர் என் ஜி பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 11ஆம் ஆண்டு தமிழ் அறிஞர்களுக்கான விருது வழங்கும் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா  […]

கோவை பிரகதி மருத்துவமனையில், பல புதிய பன்முகத் துறைகள் துவங்கப்பட்டுள்ளன புதிய  வசதிகளுடன் பன்முக மருத்துவ சேவையை புதிய வசதிகள் உள்ள துவக்க விழா பிரகதி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி பாலசுப்பிரமணியன்  தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மகாராஷ்டிராவின் கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று சிறப்பித்தார். மருத்துவமனையில் புதியதாக தொடங்கப்பட்ட துறைகள் விபத்து & அவசரநிலை எலும்பியல் &மூட்டு மாற்று இடுப்பு மற்றும் முதுகெலும்பு சிகிச்சை பொதுமருத்துவம் […]

தன்னலமற்ற வாழ்க்கை  முறையை அனைவரும் பின்பற்றினால் மகிழ்ச்சி கிடைக்கும்  கோவை திருமண்டல பேராயர் வழங்கிய கிறிஸ்துமஸ் வாழ்த்து… உலக மக்கள் அனைவருக்குமான கிறிஸ்துமஸ் பண்டிகையை  அன்பு, ஒற்றுமை, சமதர்மம், மனிதநேயம் ஆகியவற்றை பாதுகாத்து ஒற்றுமையாக. கொண்டாடுவோம்  என தென்னிந்திய திருச்சபைகளின் கோவை திருமண்டல பேராயர் மறைதிரு திமோத்தி ரவீந்தர் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியாக தெரிவித்துள்ளார். இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25 ந்தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் […]

கோவை: நலவாழ்வு முயற்சிகள் மற்றும் கிராமப்புற சுகாதார திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் சுகாதாரத்தைக் கூடுதல் வலுப்படுத்தியுள்ளதாக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் செயல் அலுவலர் (C.O.O) அமிதாப் ஜெயின் தெரிவித்துள்ளார். கோவையில் அவிநாசி சாலை நவஇந்தியா பகுதியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் புதிய “சூப்பர் ஸ்டார் காப்பீடு” திட்டம் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் C.O.O அமிதாப் ஜெயினுடன், தமிழ்நாடு எக்ஸிகியூடிவ் பிரசிடெண்ட் […]

சென்னை: தமிழ்நாடு அரசின் முக்கிய திட்டமான கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2024-25 ஆம் ஆண்டில் 1 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.400 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளார். ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.3,50,000 நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏறத்தாழ 8 இலட்சம் குடிசை வீடுகள் உள்ளனவாக “அனைவருக்கும் வீடு” என்ற கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் […]

ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் அமைந்துள்ள சாம்சங் நிறுவன தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், கடந்த செப்டம்பர் மாதம் தொழிற்சங்க உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அரசு தலையீடுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, ஊழியர்கள் மீண்டும் பணியில் இணைந்தனர். இந்நிலையில், தொழிற்சாலை நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்டித்தும், தொழிலாளர்களுக்கு மரியாதை மற்றும் நீதியை வலியுறுத்தியும், சாம்சங் தொழிலாளர்கள் […]

பைக் டாக்ஸி ஓட்டுநர்களை அச்சுறுத்தி வரும், ஆட்டோ ஓட்டுநர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்க கோரி பைக் டாக்ஸி அசோசியேஷன் அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கோவை மாவட்டத்தில் “ரேபிட்டோ செயலி” மூலம் பைக் டாக்ஸி ஓட்டி வரும் நபர்களை ரயில் நிலையம், காந்திபுரம், குனியமுத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், வாடிக்கையாளர்களையும் அச்சுறுத்தி வரும் ஆட்டோ ஓட்டுனர்களிடமிருந்து பாதுகாப்பு […]