நிலச்சரிவில் சிக்கி 100 பேர் பலி!

AFP 20240319 34LQ6CF v2 HighRes PngFlood 1710893421 - நிலச்சரிவில் சிக்கி 100 பேர் பலி!

பப்புவா நியூ கினியாவில் இன்று (மே24) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.தென் பசிபிக் தீவு நாட்டின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர்  தொலைவில் உள்ள எங்கா மாகாணத்தின் காகலம் கிராமத்தில் அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களில் 100-க்கு மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகக் கூடும்  என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.நிலச்சரிவில் புதைத்துள்ள  உடல்களை உள்ளூர்வாசிகள் மீட்டெடுக்கும் விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க  பாகிஸ்தானில் இந்திய யோகா முறை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *