இந்தியா, சர்க்கரைநோய் தொடர்பான ஆராய்ச்சியில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, தனது முதல் சர்க்கரைநோய் உயிரணு வங்கியை நிறுவியுள்ளது. இந்த உயிரணு வங்கி, சர்க்கரைநோயின் வேர்கள் மற்றும் அதன் சிகிச்சை முறைகளை ஆராய்வதற்கான உலகத்தரத்திற்கேற்ப தகவல்களை சேகரித்து வழங்கும். இந்தியாவில் சர்க்கரைநோய் பாதிப்பு உலகிலேயே அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக, புதிய சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை உருவாக்கும் நோக்குடன் இந்த உயிரணு வங்கி தொடங்கப்பட்டது. உயிரணு வங்கியின் சிறப்பம்சங்கள்: […]

ரஷ்யா, 2025 ஆம் ஆண்டில் mRNA புற்றுநோய் தடுப்பூசியை இலவசமாக விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. முன் மருத்துவ பரிசோதனைகள், புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை ஒடுக்குவதும், மெட்டாஸ்டேஸ்கள் (அதிகரித்து பரவல்) குறைவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளன. தனிப்பட்ட நோயாளிகளுக்கான தடுப்பூசிகளை வெறும் ஒரு மணி நேரத்துக்குள் உருவாக்கும் தொழில்நுட்பத்தை செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைப்பின் மூலம் விரைவாக செயல்படுத்த முடிகிறது. பாரம்பரிய செயல்முறைகளை விட இந்த நவீன முறை சிகிச்சை தயாரிப்பில் மிகுந்த வேகத்தை வழங்குகிறது. […]

பொள்ளாச்சியை சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார் அவரை கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் அங்கு மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இருதய துடிப்பில் மாற்றம் உள்ளதால் அறுவை சிகிச்சை செய்யும் போதோ அல்லது அறுவை சிகிச்சைக்கு பின்னரோ உயிருக்கு கடும் ஆபத்து ஏற்படும் […]

கோவை ராமநாதபுரத்திலிருந்து சிங்காநல்லூர் செல்லும் பகுதியில் புதிதாக ATK ஸ்கேன் லேப் மற்றும் டைக்னோஸ்டிஸ் திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் அதி நவீன முறையில் ஸ்கேன் செய்து தரப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தரமான எளிமையான முறையில் ஸ்கேன் செய்து தருகிறார்கள். மேலும் இந்த ATK ஸ்கேன் ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றனர். CT ஸ்கேன், ultra ஸ்கேன்,மற்றும் பெண்களுக்கு மார்பக […]

பிரெய்ன் ஸ்ட்ரோக் (BRAIN STROKE) எனும் மூளை பக்கவாதம் அறிகுறிகளைப் புரிந்துகொண்டு உடனடி சிகிச்சையைப் பெறவும், உடல் ரீதியாக அதிக விளைவுகளை ஏற்படுத்தும் பக்கவாதம் தாக்குதல் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என பிரபல நியூராலஜிஸ்ட் நிபுணர் அசோகன் தெரிவித்துள்ளார். பிரெய்ன் ஸ்ட்ரோக் எனும் மூளை பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் ஸ்ட்ரோக் அகாடமி என கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. எம்க்யூர் […]

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி சேர்ந்த 37 வயதானவருக்கு சப்மியூகோசல் கட்டி லியோமியோமா என்னும் உணவுக் குழாய் கட்டியினால் அவதிப்பட்டுவந்தார். இதற்கு தீர்வாக தொரகாட்டமி எனப்படும் நெஞ்சுக்கூட்டை திறந்து உணவுக் குழாயில் இக்கட்டியை அகற்றப்படும் என வேறு மருத்துவமனையில் பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் இப்பிரச்சினைக்கு எண்டோஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றமுடியும் என்பதை உறவினர்கள் மூலம் அறிந்துகொண்ட அவர் சுவேதா மருத்துவமனை முதன்மை மருத்துவர் செந்தூரனை அணுகினார். […]

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.80க்குட்பட்ட ஒக்கிலியர் காலனி, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற “கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாமினை” துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள் முன்னிலையில், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று துவக்கி வைத்து, 40 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பினையும் நடத்தி வைத்து, சீதனப்பொருட்களை வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி பொது […]

சீனா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 60 ஆய்வாளர்கள் இமயமலை பகுதியில், 41,000 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இவை வடமேற்கு திபெத்திய பீடபூமியில் உள்ள குலியா பனிப்பாறையில் இருந்து கண்டறியப்பட்டவை. அந்த பனிப்பாறையில் ஆய்வு மேற்கொண்டதில், முந்தைய காலங்களில் இருந்து 1,700-க்கும் மேற்பட்ட வைரஸ் மரபணுக்கள் இருப்பது தெரிய வந்தது. பனிப்பாறைகள் கடல் மட்டத்திலிருந்து 6,000 மீட்டர் உயரத்தில் இருப்பதால், பல பழமையான வைரஸ்கள் இங்கு உறைந்து […]

பொள்ளாச்சியில் உள்ள மிராக்கல் ஒருங்கிணைந்த மருத்துவ மையம் மற்றும் யோகா மற்றும் மத்திய அரசின் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் புற்றுநோய் சிகிச்சை பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. சக்தி குழுமத்தின் தலைவர் மாணிக்கம் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தில் தமிழ்நாடு,கேரளா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் மருத்துவக் கல்லூரி […]

ஹார்வார்ட் மருத்துவ மாணவர் டாக்டர் நிக் நோர்விட்ஸ், ஒரு மாதத்தில் 700க்கும் மேற்பட்ட முட்டைகளை உண்டு, அவரது கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், எதிர்பார்க்காமல், அவரது எல்டிஎல் (“மோசமான” கொலஸ்ட்ரால்) அளவு 20% குறைந்தது. நாள் ஒன்றுக்கு 24 முட்டைகளை சாப்பிட்ட நோர்விட்ஸ், “கீடோஜெனிக்” உணவமைப்பை பின்பற்றியுள்ளார். இந்தச் செயலின் மூலம் உணவு முறைகள் தொடர்பான விவாதத்தை சமூக ஊடகங்களில் தூண்டுவதற்காக அவர் இதை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.