மூக்குத்தி அம்மன் திரைப்பட இயக்குனரும் நடிகருமான ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கான பூஜை பொள்ளாச்சி அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்றது.
இதற்காக நடிகர் சூர்யா படத்தின் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி மற்றும் படக்குழுவினர் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வந்தனர், அவர்களை கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன் வரவேற்றார் பின்னர் அங்கு நடைபெற்ற பூஜையில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.