தென்காசியில் திமுக தெற்கு மாவட்ட கழகம் சார்பில் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற யோகா மற்றும் ஸ்கேட்டிங் போட்டியில் மாணவர்களிடம் ரூபாய் 500 வசூல் செய்யப்பட்டதாகவும், மாணவர்களை வெயிலில் கொடுமைப்படுத்தியதாக பாரதிய ஜனதா கட்சியின் ஸ்டார்ட் அப் பிரிவு மாநில தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தென்காசி மாவட்டம் ஆட்சியர் கமல் கிஷோரிடம் புகார் மனு அளித்தனர்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ. 28) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புயல் சின்னம் மற்றும் வானிலை நிலைதென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை […]