நடிகை நமீதா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தபோது, ஒரு அதிகாரி அவரிடம் மதம் மற்றும் வகுப்பை குறித்த கேள்விகள் எழுப்பியதாக புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து நமீதா ஒரு வீடியோவின் மூலம் பகிர்ந்துள்ளார். வீடியோவில், அவர் கோவிலுக்கு சென்றபோது, ஒரு பெண் அதிகாரி தன்னிடம் “உங்களுடைய மதம் என்ன? எந்த வகுப்பை சேர்ந்தவர்?” என்று கேட்டதாக கூறினார். மேலும், கோவில் நிர்வாகம் தன்னிடம் இந்து என்பதற்கான சான்றிதழ் கேட்டதாகவும், இது அவருக்கு வருத்தமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
நமீதா இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்றும், தனது திருமணம் திருப்பதியில் நடந்தது என்றும் கூறியுள்ளார். மேலும், தனது குழந்தையின் பெயரையும் கிருஷ்ணனின் பெயரில் வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற நடவடிக்கைகள் இந்தியாவின் மற்ற கோவில்களில் தன்னிடம் எப்போதும் நடந்ததில்லை என்றும், இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
Leave a Reply