செப்டம்பர் 1ஆம் தேதி முதல், தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இப்புதிய கட்டண மாற்றத்தின் படி, இந்த சுங்கச்சாவடிகள் வழியாக கடந்து செல்லும் அனைத்து வாகனங்களும் ரூபாய் 5 முதல் ரூபாய் 150 வரை கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிப்பதற்காக சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வழக்கமாக, ஆண்டில் இரண்டு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்படுவது நடைமுறையாக உள்ளது. பொதுவாக ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும்.
மக்களவைத் தேர்தல் காரணமாக ஏப்ரல் மாதம் சுங்க கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால், ஜூன் மாதம் 36 சுங்கச்சாவடிகளில் சுமார் 5 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. இப்போது செப்டம்பர் மாதத்தில் 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
Leave a Reply