திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அதிமுகவினர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை எரித்து, காலணியால் அடித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது, அண்ணாமலை வெளியிட்ட கருத்துகளுக்கு எதிராக அதிமுகவினர் பதிவு செய்த கடும் எதிர்ப்பாகும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டிய அதிமுகவினர், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக-பாஜக இடையிலான கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை தான் காரணம் என்றும், அவர் தரக்குறைவாக பேசுவதால் கூட்டணி முறிந்துவிட்டதாக அதிமுகவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த போராட்டத்தில் முன்னாள் எம்பி ரத்தினவேல், மகளிரணி மாவட்ட செயலாளர் நசீமா பாரிக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு அண்ணாமலையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இந்த திடீர் போராட்டத்தால் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது, எனினும் அங்கு உடனடியாக போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
Leave a Reply