பங்களாதேஷில் பாதிக்கப்படும் இந்துக்களுக்கு கோவையில் இந்து முன்னணி மத்திய அரசே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..
பங்களாதேஷத்தில் பாதிக்கப்படும் இந்துக்களுக்கு பாதுகாப்பு வேண்டி மத்திய அரசை வலியுறுத்தி இந்து முன்னணியின் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.
கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணியின் சார்பாக காந்தி பார்க் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் K.தசரதன் தலைமை வகித்தார் .மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜே எஸ் கிஷோர் குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.மாநில நிர்வாக குழு உறுப்பினர் S. சதீஷ் கோட்டச் செயலாளர் பாபா ஆ.கிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர்.
மாவட்ட பொதுச் செயலாளர் எம் ஜெய்சங்கர் வரவேற்புரையாற்றினார். மாவட்டச் செயலாளருக்கு K.ஆறுச்சாமி அவர்கள் முன்னிலை வகித்தார் . மாவட்டச் செயலாளர் கே மகேஸ்வரன் g.ரமேஷ் மாவட்ட செய்தி தொடர்பாளர் சி. தனபால் மாவட்டத் துணைத் தலைவர் C.சோமசுந்தரம் உள்பட நகர ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஜே எஸ் கிஷோர் குமார் அவர்கள் உரையாற்றும் போது மதத்தின் ரீதியாக பங்களாதேஷ் இந்துக்கள் தாக்கப்படுகின்றனர். அவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பை மத்திய அரசு நிச்சயம் ஏற்படுத்தி தர வேண்டும்.
இந்து கோவில்கள் உடைக்கப்படுகின்றன.
குழந்தைகள் பெண்கள் ஆகியோர் பாதுகாப்பு என்று தவிக்கின்றனர்.
இந்த நிலைமையில் பாரத நாட்டின் வெளியுறவு துறை அமைச்சரும் மத்திய அரசும் தலையிட்டு வங்கதேச இந்துகளி உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என பேசினார்
Leave a Reply