கோவை மாவட்டம் மற்றும் அனைத்து சாலையோர சிறு வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் நஞ்சப்பா ரோடு சாலையோர வியாபாரிகள் மனு அளித்தனர். சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட வியாபாரிகள், தங்களின் கடைகள் செயல்படாததால் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் கடைகளை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இந்த மனுவை மாவட்டத் தலைவர் மணி, பொருளாளர் கரிகாலன், குமார் மற்றும் 40-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சார்பில் வழங்கினர்.
Leave a Reply