Sunday, August 3

தமிழ்நாடு

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரரை கைது செய்ய இடைக்கால தடை!

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரரை கைது செய்ய இடைக்கால தடை!

தமிழ்நாடு
நில மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் உள்பட ஏழு பேர் மீது சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவின் விசாரணை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. விசாரணையின் போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டு விட்டதாகவும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்கு வெறும் ரூ.95 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து நீதிபதி, எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், அவரது சகோதரர் சேகரை இந்த வழக்கில் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தும், காவல்துறை விசாரணைக்கு அவர...
அம்மா உணவகங்களுக்கு 21 கோடி ஒதுக்கீடு செய்த முதலமைச்சர்…

அம்மா உணவகங்களுக்கு 21 கோடி ஒதுக்கீடு செய்த முதலமைச்சர்…

தமிழ்நாடு
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.அம்மா உணவகத்தில் உணவு அருந்தியவர்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். ஊழியர்களிடம் உணவு தயாரிப்பு முறைகள், உணவின் தரம் குறித்தும் விசாரித்தார்.இதனையடுத்து, சென்னை அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சியில் 200 பகுதிகளிலும் உள்ள 388 அம்மா உணவகங்களையும் சிறப்பாக நடத்த உத்தரவிட்டார்.அம்மா உணவகங்களில் புதிய பாத்திரங்கள் வாங்க ரூ.7 கோடி, கட்டடத்தை புனரமைக்க ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளார். அம்மா உணவகங்களில் ஆய்வு செய்து தேவையான உதவிகளை வழங்க அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். சமையலறை மற்றும் உணவுக்கூடத்தை தூய்மையாக பராமரித்து, ஏழைகள் பயன்பெறும் வகையில் தரமான உணவை தயாரிக்க உத...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தமிழ்நாடு, புதுச்சேரி
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஒடிசா கடற்கரை அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்ன், மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் போடப்பட்டுள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது....
சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து வந்த 5 பக்தர்கள் பரிதாப பலி.ஆடி முதல் நாளில் சோகம்.

சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து வந்த 5 பக்தர்கள் பரிதாப பலி.ஆடி முதல் நாளில் சோகம்.

தமிழ்நாடு
ஆடி மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு விரதமிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக அம்மனை தரிசிக்க செல்வது வழக்கம்.அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், வளம்பக்குடியில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு 25-க்கும் மேற்பட்டோர் இன்று (புதன்கிழமை) காலை பாதயாத்திரையாக நடந்து சென்ற பக்தர்கள் மீது சரக்கு லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை, கண்ணுக்குடி பட்டியையைச் சேர்ந்தவர்கள் இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக, தஞ்சாவூர் மாவட்டம், வளம்பக்குடி, திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.அப்போது அந்...
புதுக்கோட்டை அருகே மர்ம பை -அதிர்ச்சியடைந்த காவல்துறை ?

புதுக்கோட்டை அருகே மர்ம பை -அதிர்ச்சியடைந்த காவல்துறை ?

தமிழ்நாடு
புதுக்கோட்டை அருகே அனாதையாக கிடந்த பேக்கை காவல்துறை சோதனை செய்தபோது அதில் 50 லட்சம் மதிப்பிலான மருத்துவ குணம் கொண்ட நட்சத்திர ஆமைகள் இருப்பது கண்டுபிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் நாகையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்த இருந்த நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்த நிலையில் அதோட நீட்சியா என்று வனத்துறை மற்றும்  காவல்துறை விசாரணை புதுக்கோட்டையில் சாந்தனாதபுரம் பகுதியில் பேக் ஒன்று அனாதையாக இருப்பதாகவும் அது அசைந்து வருவதாகவும் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது அடிப்படையில் காவல்துறை ஆய்வாளர் மருது உள்ளிட்ட காவலர்கள் அங்கு சென்று சோதனை செய்தபோது பேக்கில் மருத்துவ குணம் கொண்ட நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது இதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் வனத்துறைக்கு தகவல் அளித்துவிட்டு அந்த பேக்கை நகர காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து வனத்துரையுடன் இணைந்து சோதனை செய்ததில் அதில் 97 நட்சத்தி...
டிடிஎஃப் வாசன் விசாரணைக்கு காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.

டிடிஎஃப் வாசன் விசாரணைக்கு காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.

தமிழ்நாடு
டிடிஎஃப் வக்கீலிடம் திருமலை போலீசார் தகவல்.திருப்பதி மலைக்கு வந்திருந்த டிடிஎஃப் வாசல் சாமி தரிசன வரிசையில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததை தொடர்ந்து அவர் மீது திருமலை காவல் நிலையத்தில் தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த திருமலை காவல் நிலைய போலீசார் டிடிஎஃப் வாசனுக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால்  டி டி எஃப் வாசன் தனக்கு பதிலாக தன்னுடைய வக்கீலை  திருமலை காவல் நிலையத்திற்கு அனுப்பி இருந்தார்.வழக்கு  தொடர்பான விவரங்களை டிடிஎஃப் வக்கீலிடம் தெரிவித்த போலீஸ் அதிகாரிகள் விசாரணைக்கு வாசன் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். எனவே இன்னும் ஒரு இரு நாட்களில்  டிடிஎஃப் வாசன  விசாரணைக்காக திருமலை காவல் நிலையத்தில் ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் சம்பவம...
செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்கும்படி அமலாகதுறைக்கு நீதிமன்றம் உத்தரவு !

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்கும்படி அமலாகதுறைக்கு நீதிமன்றம் உத்தரவு !

தமிழ்நாடு
சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் வழங்கப்பட்ட  வங்கி ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி அதன் உண்மை தன்மையை ஆராயக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி,  அமலாக்கத்துறைக்கு  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கபடும் என அறிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.அதில்,   வங்கி தொடர்பான அசல் ஆவணக்களுக்கும், அமலாக்கத்துறை  வழங்கிய ஆவணங்களுக்கும்  வேறுபாடுகள் இருப்பதாகவும், தங்களுக்கு வழங்கபட்ட ஆவணங்களில் கையால் எழுதி, திருத்தப்பட்டுள்ளதால், தங்களுக்கு வழங்கிய ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி அந்த ஆவணங்களின் உண்மை தன்மையை ஆராய உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேல...
தமிழ்நாட்டில் நடந்த மறக்க முடியாத துயர சம்பவம் – 20 ஆண்டு நினைவு அஞ்சலி…

தமிழ்நாட்டில் நடந்த மறக்க முடியாத துயர சம்பவம் – 20 ஆண்டு நினைவு அஞ்சலி…

தமிழ்நாடு
மாவட்டம் கும்பகோணத்தில் காசிராமன் தெருவில் உள்ள கிருஷ்ணா பள்ளியில் நடைபெற்ற தீ விபத்தில் பயின்ற 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 18 குழந்தைகள் படுகாயமுற்றார்கள். இந்த துயர சம்பவம் இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு தினம் ஜூலை 16 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 20 ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, சம்பவம் நடந்த காசிராமன் தெரு கிருஷ்ணா தனியார் பள்ளி முன்பு குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து குழந்தைகளுக்கு பிரியமான இனிப்பு வகைகள், பழங்கள் வைத்து கண்ணீர் மல்க அவர்களது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து உதிரி மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இந்த துயர சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் ஆகினும், இன்னும் பிஞ்சு குழந்தைகளை இழந்த தாக்கம் பாதிக்கப்பட...
தூத்துக்குடி மாவட்டம்: கோவில்பட்டி அருகே  முன் விரோதம்  காரணமாக  டூரிஸ்ட் வேன் உரிமையாளர் சுடு காட்டில் வெட்டி கொடூரமாக படுகொலை.

தூத்துக்குடி மாவட்டம்: கோவில்பட்டி அருகே  முன் விரோதம்  காரணமாக  டூரிஸ்ட் வேன் உரிமையாளர் சுடு காட்டில் வெட்டி கொடூரமாக படுகொலை.

தமிழ்நாடு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சையா மகன் மாடசாமி (வயது 37) இவர் தனக்கு சொந்தமான டூரிஸ்ட் வேன் மூலம் தனியார் மில்லுக்கு தொழிலாளர்களை பணிக்கு அழைத்து சென்று வரும் பணியை செய்து வந்தார். இவருக்கு மகாதேவி (30) என்ற மனைவியும் மகாஸ்ரீ (11) மதி (4) என இரு குழந்தைகள் உள்ளனர். பணியை முடித்து விட்டு தினமும் இரவு 8 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம். நேற்று இரவு வெகுநேரமாகியும் மாடசாமி வீட்டுக்கு வரவில்லை. அவரது மொபைலும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.  இதையடுத்து அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் மூப்பன்பட்டி சுடுகாட்டில் கொடுரமான வெட்டு காயங்களுடன் மாடசாமி படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததை அவ்வழியாக சென்ற மக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ்  இன்ஸ்பெக்டர் சுகாதேவி தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு வி...
ஏழுமலையான் கோவிலில் ஆணிவார ஆஸ்தானம்….

ஏழுமலையான் கோவிலில் ஆணிவார ஆஸ்தானம்….

தமிழ்நாடு
சம்பிரதாய முறைப்படி ஏழுமலையான் கோவில் புது வரவு செலவு கணக்கு துவக்கப்பட்டது.ஸ்ரீரங்கம் கோவில் மங்கள பொருட்கள் பட்டு வஸ்திரங்கள் ஆகியவை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு முன்னிலையில் ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.ஆணி வாரா ஆஸ்தான தினமான இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சம்பிரதாய முறைப்படி புது வரவு செலவு கணக்கு துவக்கப்பட்டது. ஆணிவார ஆஸ்தானம் நாள் அன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புது கணக்கு துவங்குவது வழக்கம். இதனை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் இருந்து மங்களப் பொருட்கள் கொண்டு வரப்பட்டு ரங்கநாதர் சார்பில் ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படுவதும் வழக்கம். ஆணிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு இன்று கோவிலில் ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் தேவஸ்தான அதிகாரிகள் கடந்த ஒரு ஆண்டு வரவு செலவு கணக்கை ஏழுமலையான் முன் படித்து சமர்ப்பித்தனர்.இதனை தொடர்ந்து கோவில் ஏகாங்கி ஜீயர்கள், தேவஸ...