செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்கும்படி அமலாகதுறைக்கு நீதிமன்றம் உத்தரவு !

சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் வழங்கப்பட்ட  வங்கி ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி அதன் உண்மை தன்மையை ஆராயக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி,  அமலாக்கத்துறைக்கு  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கபடும் என அறிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதில்,   வங்கி தொடர்பான அசல் ஆவணக்களுக்கும், அமலாக்கத்துறை  வழங்கிய ஆவணங்களுக்கும்  வேறுபாடுகள் இருப்பதாகவும், தங்களுக்கு வழங்கபட்ட ஆவணங்களில் கையால் எழுதி, திருத்தப்பட்டுள்ளதால், தங்களுக்கு வழங்கிய ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி அந்த ஆவணங்களின் உண்மை தன்மையை ஆராய உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில், வழக்கில் மீண்டும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்க அனுமதிக்க வேண்டும் எனவும்  மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அல்லி, இவ்விரு மனுக்களுக்கும் பதிலளிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு  உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிக்க  திருச்சி: TET தேர்ச்சியாளர்கள் 400 பேர் ஆர்ப்பாட்டம் - திமுக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

டிடிஎஃப் வாசன் விசாரணைக்கு காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.

Tue Jul 16 , 2024
டிடிஎஃப் வக்கீலிடம் திருமலை போலீசார் தகவல். திருப்பதி மலைக்கு வந்திருந்த டிடிஎஃப் வாசல் சாமி தரிசன வரிசையில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததை தொடர்ந்து அவர் மீது திருமலை காவல் நிலையத்தில் தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த திருமலை காவல் நிலைய போலீசார் டிடிஎஃப் வாசனுக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருந்தனர். […]
IMG 20240716 WA0004 - டிடிஎஃப் வாசன் விசாரணைக்கு காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.

You May Like