மாவட்டம் கும்பகோணத்தில் காசிராமன் தெருவில் உள்ள கிருஷ்ணா பள்ளியில் நடைபெற்ற தீ விபத்தில் பயின்ற 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 18 குழந்தைகள் படுகாயமுற்றார்கள். இந்த துயர சம்பவம் இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு தினம் ஜூலை 16 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 20 ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, சம்பவம் நடந்த காசிராமன் தெரு கிருஷ்ணா தனியார் பள்ளி முன்பு குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து குழந்தைகளுக்கு பிரியமான இனிப்பு வகைகள், பழங்கள் வைத்து கண்ணீர் மல்க அவர்களது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து உதிரி மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இந்த துயர சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் ஆகினும், இன்னும் பிஞ்சு குழந்தைகளை இழந்த தாக்கம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மத்தியிலிருந்து இன்னும் விலகவில்லை. குழந்தைகள் இறந்த தினத்தை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும் மற்றும் பள்ளிகளுக்கு உள்ளுர் விடுமுறை அளிக்க வேண்டும் என இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.