Sunday, April 20

டிடிஎஃப் வாசன் விசாரணைக்கு காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.



டிடிஎஃப் வக்கீலிடம் திருமலை போலீசார் தகவல்.


திருப்பதி மலைக்கு வந்திருந்த டிடிஎஃப் வாசல் சாமி தரிசன வரிசையில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததை தொடர்ந்து அவர் மீது திருமலை காவல் நிலையத்தில் தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் புகார் அளித்தனர்.

புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த திருமலை காவல் நிலைய போலீசார் டிடிஎஃப் வாசனுக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஆனால்  டி டி எஃப் வாசன் தனக்கு பதிலாக தன்னுடைய வக்கீலை  திருமலை காவல் நிலையத்திற்கு அனுப்பி இருந்தார்.

வழக்கு  தொடர்பான விவரங்களை டிடிஎஃப் வக்கீலிடம் தெரிவித்த போலீஸ் அதிகாரிகள் விசாரணைக்கு வாசன் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

எனவே இன்னும் ஒரு இரு நாட்களில்  டிடிஎஃப் வாசன  விசாரணைக்காக திருமலை காவல் நிலையத்தில் ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று திருப்பதி மலையில் டிடிஎஃப் வாசன் தொடர்பான நடமாட்டங்கள் அனைத்தும் திருப்பதி மலை முழுவதும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள நிலையில் அவற்றை தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் சேகரித்து வைத்துள்ளனர்.

அந்த காட்சிகள் அடிப்படையில் டிடிஎஃப் வாசன் மீது மேலும் சில வழக்குகள் பதிவாக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க  "கட்டண உயர்வின்றி தரமான சேவையை ரயில்வே வழங்குகிறது: வானதி சீனிவாசன்"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *