சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அம்மா உணவகத்தில் உணவு அருந்தியவர்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். ஊழியர்களிடம் உணவு தயாரிப்பு முறைகள், உணவின் தரம் குறித்தும் விசாரித்தார்.
இதனையடுத்து, சென்னை அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சியில் 200 பகுதிகளிலும் உள்ள 388 அம்மா உணவகங்களையும் சிறப்பாக நடத்த உத்தரவிட்டார்.
அம்மா உணவகங்களில் புதிய பாத்திரங்கள் வாங்க ரூ.7 கோடி, கட்டடத்தை புனரமைக்க ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அம்மா உணவகங்களில் ஆய்வு செய்து தேவையான உதவிகளை வழங்க அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். சமையலறை மற்றும் உணவுக்கூடத்தை தூய்மையாக பராமரித்து, ஏழைகள் பயன்பெறும் வகையில் தரமான உணவை தயாரிக்க உத்தரவிட்டுள்ளார்.