
ஒரே குடும்பத்தை சோர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை !
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கடன் சுமையால் 2 பிள்ளைகளை தூக்கில் மாட்டி கொலை செய்துவிட்டு தாயும் தூக்கி மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கிழக்கு காமராஜர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி - கீர்த்திகா தம்பதியினர்.15 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு கோகுல்நாத், சாய் நந்தினி என் இரு பிள்ளைகள் உள்ளனர்.கிருஷ்ணமூர்த்தி மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள ரைஸ் மில் ஒன்றில் அரவைத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.கீர்த்திகா கூலி வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில் குடும்பத்தில் கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதிஇருவரும் அவ்வப்போது கடனை எவ்வாறு திருப்பி கொடுப்பது பேசி மன வேதனையில் இருந்ததாக தெரிகிறது.இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கிருஷ்ணமூர்த்தி ரைஸ் மில்லுக்கு வேலைக்கு செ...