Thursday, August 7

தமிழ்நாடு

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்ப உற்சவம் …

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்ப உற்சவம் …

தமிழ்நாடு
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் நேற்று ஆடிப்பூர தெப்ப உற்சவம் நடைபெற்றது. திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்பதிருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நாள் அம்மன் மரக்கேடயத்திலும், 2ம் நாள் கிளிவாகனத்திலும், 3ம் நாள் காமதேனு வாகனத்திலும், 4ம் நாள் சந்திரபிரபை வாகனத்திலும், 5ம் நாள் வெள்ளி ரிஷபவாகனத்திலும், 6ம்நாள் பல்லக்கிலும், 7ம்நாள் பஞ்சமூர்த்தி புறப்பாடும், ரிவபமூஷிகமயூர வாகனத்திலும், 8ம்நாள் சிம்மவாகனத்திலும், விழாவின் 9ம் நாளான 6-ந் தேதி காலை கோரதத்திலும், மாலை வெள்ளிமஞ்சத்திலும், 10ம் நாள் பல்லக்கிலும் எழுந்தருளி 4ம் பிரகாரத்தில் வீதியுலா வந்தார்.தொடர்ந்து அன்று அம்மன் சன்னதியில் ஏற்றி, இறக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 11ம் நாளான நேற்று முன்தினம் வெள்ளிமஞ்சத்தில் எழுந்தருளுளினார். விழாவின் ம...
திருச்சியில் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்…

திருச்சியில் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்…

தமிழ்நாடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ. ஆயிரம் வழங்கும் திட்டத்தினை காணொளி வாயிலாக கோயம்புத்தூரில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற தமிழ் புதல்வன் நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு தமிழ் புதல்வன் திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வங்கி அட்டையை வழங்கினார்கள். திருச்சி மாவட்டத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தில் முதற்கட்டமாக 123 கல்லூரிகளைச் சேர்ந்த12,655 மாணவர்கள் பயன் பெறுகின்றனர். மாணவர்களின் வங்கி கணக்கில் 1000 ரூபாய் செலுத்தப்பட்டது. இத்திட்டத்தில் பயன் பெற்ற மாணவர்கள் தெரிவிக்கையில் :- அரசு மற்றும் அரசு உதவ...
குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

தமிழ்நாடு
திருச்சமாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் ஆலத்துடையான் பட்டி ஊராட்சி கல்லாங்குத்து பகுதியில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆலத்துடையான்பட்டி கல்லாங்குத்து பகுதிக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தினர் குழாய்கள் மேம்படுத்தும் பணிக்காக பள்ளம் தோண்டிய பொழுது தனி நபர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து பதிக்கப்பட்டிருந்த குழாய்களை சேதப்படுத்தியதால் அப்பகுதி பொது மக்களுக்கு கடந்த சில வாரங்களாக குடிநீர் விநியோகம் தடைபட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் மற்றும் ஆலத்துடையான் பட்டி ஊராட்சித் தலைவர் ராஜசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து ...
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீஸ் லிமிடெட் சார்பில் நடைபெற உள்ள ANTHE – 2024 தேர்வுகள் அக்டோபர் மாதம் தொடக்கம்!…

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீஸ் லிமிடெட் சார்பில் நடைபெற உள்ள ANTHE – 2024 தேர்வுகள் அக்டோபர் மாதம் தொடக்கம்!…

கல்வி - வேலைவாய்ப்பு, தமிழ்நாடு
தேர்வு தயாரிப்பு துறையில் முன்னனியில் இருக்கும் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் இன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆகாஷ் நேஷனல் டேலண்ட் ஹன்ட் தேர்வு(ANTHE - 2024) சமீபத்திய பதிப்பின் தொடக்கத்தை பெருமையுடன் அறிவித்துள்ளது. தனது 15 வது வெற்றிகரமான ஆண்டை கொண்டாடும் ஆன்தே சிறந்த சாதனையாளர்களை வளர்ப்பதில் மகத்தான சாதனை படைத்துள்ளது. பல ஆண்டுகளாக அதன் மாணவர்களில் பலர் NEET, UG மற்றும் JEE அட்வான்ஸ்டில் முதல் தரவரிசைகள் உட்பட மதிப்புமிக்க தேர்வுகளில் சிறந்து விளங்கியுள்ளனர். இந்நிலையில் இதன் அறிமுக விழா திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீஸ் லிமிடெட் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் எம்.டி தீபக் மெஹ்ரோத்ரா கலந்து கொண்டு "ஆன்தே-2024" தேர்வின் இலட்சினையை வெளியிட்டார். இந்நிகழ்வில் உதவி இயக்குநர் ராகவேந்திரா, கிளை தலமையாளர் குழந்தைவேல் ஆகியோர்...

பள்ளி வாகன ஓட்டுநர் சேமலையப்பன் உயிரிழந்த சம்பவம் 5 லட்சம் நிதியை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் வழங்கினார்..

தமிழ்நாடு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் பகுதியில் தனியார் பள்ளி வாகன ஓட்டுனர் சேமலையப்பன் நேற்று முன்தினம் 20 மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற பொழுது மாரடைப்பால் உயிரிழந்தார் உயிரிழக்கும் தருவாயிலும் வாகனத்தை சாலையோரம் நிறுத்தி 20 மாணவர்களின் உயிரை காப்பாற்றினார் இதனை பாராட்டி தமிழக முதல்வர் அவருக்கு இரங்கல் தெரிவித்ததுடன் 5 லட்சம் நிதியை வழங்க உத்தரவிட்டிருந்தார் அதன்படி இன்று தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் சேமலையப்பன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார் அதில் மூத்த மகன் சந்துரு 2 லட்சம் இளைய மகன் வசந்தத்திற்கு இரண்டு லட்சம் மற்றும் அவரது பெற்றோர் சுபனுக்கு ஒரு லட்சம் என ஐந்து லட்சத்திற்கான காசோலை பிரித்து வழங்கப்பட்டது....
சவுக்கு சங்கர்…..

சவுக்கு சங்கர்…..

தமிழ்நாடு
சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த  ஆட்கொணர்வு மனு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு அறிவிப்பு. வேறு அமர்வில் வழக்கை விசாரணைக்கு பட்டியலிட மாற்ற பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை. பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து அவரது தாய் கமலா தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதுசம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இடைக்கால ஜாமீன் வழங்கியதுடன், உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஏற்கனவே இந்த வழக்கை இந்த அம...
காரில் வந்து ஆடு திருடும் கும்பல் : கோவையில் பெண் உட்பட ஆறு பேர் கைது<br>

காரில் வந்து ஆடு திருடும் கும்பல் : கோவையில் பெண் உட்பட ஆறு பேர் கைது

தமிழ்நாடு
கோவை, குனியமுத்தூர், வடவள்ளி பகுதிகளில் காரில் வந்து ஆடு திருடும் கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் வெள்ளை நிற காரில் அந்த கும்பல் இரண்டு வீடுகளில் பத்து ஆடுகளை திருடி சென்றது. மேலும் வடவள்ளி, திருமுருகன் நகரில் வசிக்கும் லட்சுமணன் என்பவர் வீட்டில் வளர்க்கப்பட்ட மூன்று ஆடுகள் திருடப்பட்டன. அதே போன்று காந்திநகர் அருகே நால்வர் நகரில் வசிக்கும் கண்ணன் என்பவர் வீட்டில் நான்கு ஆடுகளும், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கல்பனா என்பவர் வீட்டின் முன்பு கட்டி இருந்த ஆடுகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். மேலும் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் வீட்டில் ஆறு ஆடுகள் திருடு போனது. இது குறித்து அவர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் காரில் வந்து ஆடு திருடும் நபர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதைத்...
மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…..

மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…..

தமிழ்நாடு
ண்ணச்சநல்லூர் எதுமலை சாலை பிரிவில் மின் கட்டண உயர்வு, கடந்த சில மாதங்களாக உரிய ரேஷன் பொருட்கள்  வழங்காததாலும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், மத்திய, மாநில அரசு காவேரியில் இருந்து தண்ணீரை உடனடியாக பெற்று தர வேண்டியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மண்ணச்சநல்லூரில்  உள்ள எதுமலை சாலை பிரிவில் திருச்சி வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டண உயர்வு, கடந்த சில மாதங்களாக உரிய ரேஷன் பொருட்கள்  வழங்காததாலும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், மத்திய, மாநில அரசு காவேரியில் இருந்து தண்ணீரை உடனடியாக பெற்று தர வேண்டியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி  திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ். குமார் மற்றும்...
வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை திருட்டு !

வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை திருட்டு !

தமிழ்நாடு
திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை திருட்டு - வீட்டிலிருந்த உணவை எடுத்துச் சென்று வீட்டின் அருகில் நிதானமாக சாப்பிட்டு சென்ற திருடர்கள் .திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அகிலாண்டபுரம் மகாலட்சுமி நகரில் வசித்து வருபவர் இளஞ்செழியன் இவருக்குமனைவி மற்றும் விவேக் விக்னேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர் .இந்நிலையில் நேற்று இரவு தாயார் கீழ்வீட்டிலும் இளஞ்செழியன் மற்றும் அவரது இரு மகன்களும் மாடியிலும் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 30 பவுன் நகையை திருடிவிட்டு வீட்டின் சமையல் அறையில் இருந்த உணவுகளை எடுத்துக்கொண்டு வீட்டின் அருகிலேயே கொண்டு சென்று நிதானமாக சாப்பிட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர் .காலையில் பூட்டு உடைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த இளஞ்செழியன் பார்த்தபோது 30 பவுன் ந...
நாட்டு துப்பாக்கி வெடித்து ஒருவர் பலி……

நாட்டு துப்பாக்கி வெடித்து ஒருவர் பலி……

தமிழ்நாடு
புதுக்கோட்டை அருகே வேட்டைக்கு சென்ற இரண்டு பேர் நாட்டு துப்பாக்கியை சரி செய்யும் போது அதிலிருந்து குண்டுகள் வெடித்து ஒருவர் வயிற்றில் குண்டு பாய்ந்து சிகிச்சை பலனின்றி இறப்பு மற்றொருவர் பிடித்து காவல்துறையினர் விசாரணை புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் இவருடைய உறவினர் சரவணன் இவர்கள் இரண்டு பேரும் அந்த பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு வேட்டைக்கு செல்வதற்காக தங்களிடம் உள்ள நாட்டு துப்பாக்கி எடுத்துக்கொண்டு புறப்பட்டு உள்ளனர் அப்போது துப்பாக்கியில் விரிசல் ஏற்பட்டிருந்தது இருவருக்கும் தெரிய வந்தது இதனை தொடர்ந்து அருகில் இருந்த வெல்டிங் பட்டறைக்கு சென்று அங்கு வெல்டிங் அடித்து விட்டு செல்லலாம் என்று நினைத்து வெல்டிங் பட்டறைக்கு சென்றுள்ளனர் அங்கு வெல்டிங்  செய்து கொண்டிருக்கும் போது தவறுதலாக நாட்டுத் துப்பாக்கி வெடித்ததாக கூறப்படுகிறது ஏற்கனவே அதில் பால்ராஜ் குண்டு...