Sunday, August 10

தமிழ்நாடு

சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை…

சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை…

தமிழ்நாடு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு தற்போது பக்தர்கள் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கிய நிலையில், மழை காரணமாக மலைப்பாதையில் நீர் ஓடைகள் உருவாகியுள்ளதால், அங்கு செல்லும் பாதை சிரமமானதாக மாறியிருக்கிறது. இதனால், பக்தர்கள் அடுத்த 4 நாட்களுக்கு கோவிலுக்கு செல்வதை தடைசெய்யும் முடிவை வனத்துறையினர் எடுத்துள்ளனர். அதனால், பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப்பகுதிக்கு வர வேண்டாம் என அவர்களிடம் வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்....
ஆம்னி பேருந்துகளில் 2 மடங்கு கட்டண உயர்வு !

ஆம்னி பேருந்துகளில் 2 மடங்கு கட்டண உயர்வு !

தமிழ்நாடு
சென்னை:தாம்பரம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், தாம்பரம்-கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில் 50-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திருச்சி, மதுரை, நெல்லை போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் சில தொலைதூர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு சென்றன. இந்த ரெயில்களில் எழும்பூர், மாம்பலம், தாம்பரம் ரெயில் நிலையங்களில் இருந்து ஏற வேண்டிய பயணிகள் மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணிக்க வேண்டிய நிலைக்கு அடைந்தனர்.மின்சார ரெயில்கள் பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்பட்டன, இதனால் பயணிகள் விரைவாக செல்ல முடியாமல் போனனர். இதனால் பயணிகள் அரசு பஸ்கள், ஆட்டோ, கார்களில் பயணிக்க சென்றனர். கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு சென்ற பயணிகள் அதிகளவாகவே சென்றதால் ஜி.எஸ்.டி.ரோடு முழுவதும் வாகன நெரிசல் ஏற்பட்டது.குரோம்பேட்டையில் இருந்து செங்கல்பட்டு ...
இன்று அதிமுக ஆவசர செயற்குழுக் கூட்டம் !

இன்று அதிமுக ஆவசர செயற்குழுக் கூட்டம் !

தமிழ்நாடு
அதிமுக ஆவசர செயற்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் கட்சி தோல்வியைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து, தேர்தல் தோல்வியைப் பற்றிய விவாதம் மேற்கொண்டு, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இதில், வேட்பாளர்களின் தேர்வில் தவறுகள், தேர்தல் பணிகளில் ஒருங்கிணைப்பின்மை, உட்கட்சி சிக்கல்கள் போன்றவை குறித்த புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. கட்சியைப் பலப்படுத்த, அதிமுகவை ஒருங்கிணைக்க, மற்றும் தோல்விக்கு காரணமான மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் கூறப்பட்டன. இதையடுத்து, 9-ஆம் தேதி நடைபெறவிருந்த மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் ரத்துசெய்யப்பட்டு, அவசர செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.இதற்கமைய, சென்னையில் கட்ச...
கருணாநிதி நினைவு நாணயம் !

கருணாநிதி நினைவு நாணயம் !

தமிழ்நாடு
கருணாநிதி நினைவு நாணயத்தின் வெளியீட்டுக்கான விழாவின் பிற்பகுதியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதத்தில் கூறியதாவது:“கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிடும் இந்திய ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டின் முதல்வராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், முத்தமிழறிஞர் கலைஞரின் மகனாகவும் என் நன்றியையும், தலைவர் கலைஞரின் கோடானு கோடி உடன்பிறப்புகளின் நன்றியையும் உங்களில் ஒருவனாக உரித்தாக்குகிறேன்.” அந்தக் கடிதத்தின் முழு விவரம்:இந்தியாவின் கூட்டாட்சிக் கருத்தியலை வலுப்படுத்தி, மாநில சுயாட்சியின் உரிமைக்கான குரலாகத் தொடர்ந்து கூறியவர், இந்திய ஜனநாயகத்தை நிலைநாட்டி பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்டியவர், குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்வு செய்ய முக்கிய பங்கு வகித்தவருமான முத்தமிழறிஞர் கலைஞரை, அவரது நூற்றாண்டு நிறைவின் வாயிலாக, இந்திய ஒன்ற...
தமிழக மலைப்பகுதிகளில் ஆய்வு… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

தமிழக மலைப்பகுதிகளில் ஆய்வு… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் உள்ள மலைப்பகுதிகளில், குறிப்பாக நீலகிரி, வால்பாறை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி போன்ற பகுதிகளில் பெருமழைக்காலங்களில் ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடுகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆய்வை, வனத்துறை, புவிசார் அறிவியல் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சுற்றுச்சூழல் துறை போன்ற பல்துறை வல்லுநர்கள் இணைந்து நடத்த உள்ளனர். இந்த ஆய்வு, மாநிலப் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் அறிவியல் அடிப்படையில் விரிவாக நடைபெறும். அதன்படி, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடுகளை முன்னதாகவே கண்டறிந்து, தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், நீண்டகால அடிப்படையில் ஆபத்துகளை குறைக்கும் நோக்கில் ஆட்சிமுறை நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகள் குழுவினால் வழங்கப்படும். இந்த பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்குமென முதல்வர் மு.க...
சென்னையில் மின்சார ரயில்கள் மாற்றம் !

சென்னையில் மின்சார ரயில்கள் மாற்றம் !

தமிழ்நாடு
சென்னையில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் முடிவடையாத காரணமாக, இன்று (ஆகஸ்ட் 15) முதல் 18ம் தேதி வரை மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சில மெமு ரயில்கள் கூட ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.இந்த மாற்றங்களை எதிர்கொள்வதற்காக, தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. சென்னையில், பொதுவாக மின்சார ரயில்களில் கூட்டம் அதிகமாகவே இருப்பதால், பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து முக்கியமாகக் கணக்கிடப்படுகிறது. கல்லூரி, பள்ளி மற்றும் வேலைக்கு செல்வோர் அதிகளவிலான வேளைகளில் (காலை மற்றும் மாலை) மின்சார ரயில்களை பயன்படுத்துவார்கள். இதனால், பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படும் போது பேருந்து நிலையங்களில் க...
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஏற்றப்பட்ட தேசிய கொடி

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஏற்றப்பட்ட தேசிய கொடி

தமிழ்நாடு
உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலின் கீழரத வீதியில் உள்ள 142 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தில் சுதந்திர தின விழா நடத்தப்பட்டது. நடராஜர் கோவிலில் முதற்கால பூஜை முடிந்த பிறகு, தேசியக் கொடியை நடராஜன் திருவடிகளில் வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்னர், மேளதாளங்களின் ஒலியுடன், பொது தீட்சிதர்களின் தலைமைசெயலாளர் வெங்கடேச தீட்சதரின் தலைமையில் ஊர்வலமாக கொண்டு வந்த கொடியை ராஜகோபுரத்தில் ஏற்றினர்.சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய விழாக்களில் ஆண்டிற்கு இரண்டு முறை இந்திய தேசிய கொடியை சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கீழ்கோபுரத்தில் ஏற்றுவது குறிப்பிடத்தக்கது....
‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகபடுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் …..

‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகபடுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் …..

தமிழ்நாடு
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றினார். பின்னர் உரையாற்றிய அவர், "நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த விடுதலை நாள் வாழ்த்துகள். விடுதலையை காப்பாற்றிய தியாகிகளை போற்றுவோம். சுதந்திரத்துக்காக போராடியவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற உறுதி செய்கிறோம். 300 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த சுதந்திரம் இது. ரத்தத்தையே கொடையாக தந்து பெற்ற இந்திய சுதந்திரத்தை, 50 ஆண்டுகளுக்கு முன் மாநில முதலமைச்சர்களுக்குப் கொடியேற்ற உரிமை வழங்கியவர் கலைஞர். 4வது ஆண்டாக தேசிய கொடி ஏற்றுவதில் பெருமை அடைகிறேன். நமது பன்முகத்தன்மையின் அடையாளம் தேசிய மூவர்ணக் கொடியே. விடுதலை போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. திராவிட மாடல் அரசு, எந்த மாநிலமும் செய்யாத வகையில் அனைத்து தியாகிகளையும் போற்றுகிறது. சமூகநீதி, சமத்துவம், மொழிப்பற்று ஆக...
பள்ளி கூடம் திறப்பதற்காக இரண்டு மணி நேரம் காத்திருக்கும் அவலம் <br>

பள்ளி கூடம் திறப்பதற்காக இரண்டு மணி நேரம் காத்திருக்கும் அவலம்

தமிழ்நாடு
உப்பிலிய புரத்தை அடுத்துள்ள சோபனாபுரம் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் பழங்குடியின மாணவ  மாணவிகள் பள்ளி கூடம் திறப்பதற்காக இரண்டு மணி நேரம் காத்திருக்கும் அவலம் திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள சோபனபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது காஞ்சேரிமலை, புதூர் மற்றும் ஒடுவம்பட்டி ஆகிய கிராமங்கள் சோபனபுரம் ஊராட்சியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பகுதியில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியாகும் இப்பகுதிகளில் இருந்து   சோபனாபுரம்  மற்றும் வைரி செட்டிபாளையம்  கோட்டப்பாளையம்  பள்ளிகளுக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்  தினமும் பேருந்தில் சென்று பயின்று   வருகின்றனர்.இப் பகுதியில் இருந்து காலை, மாலை என தினசரி இருமுறை மட்டுமே அரசு பேருந்து  இயக்கபடுவதாக தெரிகிறது. காலை 6.30 மணிக்கும் மாலை 6 மணிக்கும் பேருந்து வந்து செல்லுவதாக இப்பகுதியில் வாழும்  பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சோ...
கோவை ரயில் நிலையத்திற்கு மான் கொம்புகளுடன் வந்தவர் சிக்கினார்….<br>

கோவை ரயில் நிலையத்திற்கு மான் கொம்புகளுடன் வந்தவர் சிக்கினார்….

தமிழ்நாடு
கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் பயணிகளின் உடைமைகளை பரிசோதனை செய்தனர். இதில் ஒருவர் வைத்து இருந்த பையில் சந்தேகத்திற்கு இடமான பொருள் இருப்பதை காவல் துறையினர் கவனித்தார். உடனே காவல் துறையினர் அந்த பையை திறந்து பார்த்த போது அதில் இரண்டு மான் கொம்புகள் இருந்தன. உடனே அந்த பையை கொண்டு வந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த லட்சுமி சரண் என்பவரை காவல் துறையில் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ஆவணங்கள் இன்றி மான் கோம்புகள் வைத்து இருந்தது தெரியவந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவருக்கு மான் கொம்புகள் எப்படி கிடைத்தது ?  விற்பனை செய்ய கொண்டு வந்தாரா ?  என்பது குறித்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்....