Friday, July 4

அரசியல்

பொள்ளாச்சி, வால்பாறை சட்டமன்ற வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு…

பொள்ளாச்சி, வால்பாறை சட்டமன்ற வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு…

அரசியல்
பொள்ளாச்சி - வால்பாறை சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. பணி சார்-ஆட்சியர் கேத்தரின் சரண்யா இதனை பொள்ளாச்சியில் வெளியிட்டார். பொள்ளாச்சியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,28,489 ஆகும். இதில் ஆண்கள் 1,08,863 பேர், பெண்கள் 1,19,584 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 42 பேர் உள்ளனர். வால்பாறை தொகுதி (தனி): வால்பாறை தொகுதியில் மொத்தம் 1,99,173 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 94,712 பேர், பெண் வாக்காளர்கள் 1,04,436 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 25 பேர் அடங்குகின்றனர். இந்த தொகுதிகளில் அடுத்த கட்ட தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன....
மாநில செயலாளர் மாரடைப்பால் உயிரிழப்பு!

மாநில செயலாளர் மாரடைப்பால் உயிரிழப்பு!

அரசியல்
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் சரவணன் மாரடைப்பால் உயிரிழந்தார்.புதுச்சேரி: தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளராக இருந்த சரவணன் (47) மாரடைப்பால் உயிரிழந்தார்.தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்தின் நம்பிக்கையாளர் என்று கருதப்பட்ட சரவணன், நடிகர் விஜய் சார்ந்த பல நிகழ்வுகளிலும் முக்கியப் பங்கை வகித்து வந்தார். விரைவில் விக்கிரவாண்டியில் நடைபெறவிருந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.நேற்று (அக்டோபர் 21) விக்கிரவாண்டியில் இருந்து தனது பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய சரவணன், இன்று மாலை வீட்டில் இருந்தபோது திடீரென நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டார். உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.சரவணனின் உடல் தற்போது புதுச்சேரி சித்தன்குடியில் உள்ள அ...
அதிமுக 53ஆம் ஆண்டு துவக்க விழா உற்சாகம்…

அதிமுக 53ஆம் ஆண்டு துவக்க விழா உற்சாகம்…

அரசியல்
கோவை மாநகரில் அதிமுக 53ஆம் ஆண்டு துவக்க விழா, மாபெரும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாநகர மாவட்ட செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே. அர்ஜுனன் தலைமையில், ஏராளமான கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்து, மாண்புமிகு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், மாண்புமிகு அம்மா, மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர். இந்த விழாவில், 2026 சட்டமன்றத் தேர்தலில் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் மீண்டும் பொற்கால ஆட்சி ஏற்படுத்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. முன்னாள் அமைச்சரும் தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி. வேலுமணியின் வழிகாட்டுதலின் பேரிலும், கழக தொண்டர்கள் பெரும் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, இதயதெய்வம் மாளிகையில் கழக மூவர்ணக் கொடியேற்றம் செய்யப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன. கழகத்தின்...
அதிமுக 53ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்!

அதிமுக 53ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்!

அரசியல்
அதிமுக 53ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகே நகர செயலாளர் V. கிருஷ்ணகுமார் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், நகர பொருளாளர் வடுகை கனகு, மாணவரணி மாவட்ட செயலாளர் ஜேம்ஸ்ராஜா MC, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பி.ஆர்.கே குருசாமி, நகர மகளிர் அணிச் செயலாளர் சபினா பேகம், கவிதா மற்றும் பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  ...
திமுக அரசின் நடவடிக்கைக்கு எதிராக அதிமுக மனித சங்கிலி போராட்டம்

திமுக அரசின் நடவடிக்கைக்கு எதிராக அதிமுக மனித சங்கிலி போராட்டம்

அரசியல்
திமுக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக, அதிமுக சார்பில் அனைத்து பகுதிகளிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சொத்துவரி மற்றும் மின்கட்டண உயர்வுக்கு எதிராக கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி முன்பாக, கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் நகர செயலாளர் லோகுநாதன், கூடலூர் நகர செயலாளர் குறுத்தச்சலம், கூடலூர் நகர தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட பொறுப்பாளர் நாகராஜ், இளைஞர் அணி இணை செயலாளர் சசிகுமார், முன்னாள் துணைத் தலைவர் குணசேகரன், கூட்டுறவு சங்க தலைவர் தன்பால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் என பலர் கலந்துகொண்டனர்.  ...
தொண்டாமுத்தூரில் ரூ. 3.79 கோடி திட்டங்களை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார்….

தொண்டாமுத்தூரில் ரூ. 3.79 கோடி திட்டங்களை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார்….

அரசியல்
தொண்டாமுத்தூர் ஊராட்சியில் மற்றும் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் ரூ. 3.79 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார். புதிய தார் சாலைகள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகளை ஆரம்பித்து வைத்து, ஏற்கனவே நிறைவுற்ற மக்கள் நல திட்டங்களைப் பற்றியும் அவர் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போது, அவர், "அதிமுக ஆட்சியின்போது சொத்து வரி, மின் கட்டணம், பேருந்து கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டை நிறுத்தப்பட்டது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்து மீட்டர் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதை மக்கள் மறக்கவில்லை. திமுக அரசு மக்களை பாதிக்கக்கூடிய வகையிலான வரி சுமையை சுமத்தவில்லை என்பதை அதிமுக முன்னாள் அமைச்சர்களும் நிர்வாகிகளும் உணர வேண்டும்" என்றா...
பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம்…

பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம்…

அரசியல்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் நகர அதிமுக சார்பில் நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் துணை சபாநாயகர்மான பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சொத்து வரி, உயர்வு,விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த பேட்டியின் போது தமிழகத்தில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரையில் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தவிர எந்த...
கோவையில் பிராமணர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவையில் பிராமணர்கள் ஆர்ப்பாட்டம்…

அரசியல்
பிராமணர்களை கேலி செய்பவர்கள் மீது PCR சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு கோவை மாவட்ட அனைத்து பிராமண சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு பிராமண சங்கத்தை சார்ந்தவர்களும் இந்து அமைப்பை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். மேலும் இதில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிராமணர்கள் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், சனாதனம் காப்போம், பிராமண த்வேஷத்தை ஒழிப்போம் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்ப்பட்டன....
24 மனை தெலுங்கு செட்டியார்கள்: சமூக சலுகைக்கான கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம்…

24 மனை தெலுங்கு செட்டியார்கள்: சமூக சலுகைக்கான கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம்…

அரசியல்
தமிழ்நாடு 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமை சங்கத்தின் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி செயல்பாடு திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் நடராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோவை திருப்பூர் ஈரோடு திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மகளிர் அணி இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கூட்டத்திற்கு பின்னர் அச்சங்கத்தின் மாநில தலைவர் நடராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கடந்த 50 ஆண்டுகளாக 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம், ஆனாலும் எங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கவில்லை கல்வியில் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றா...
எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த கல்லூரி மாணவர்கள்…

எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த கல்லூரி மாணவர்கள்…

அரசியல்
முன்னாள் முதல்வரும் கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் தலைமையை ஏற்று தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தங்களை அதிமுகவில் இணைத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கோவையை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துகொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். மேலும் கழகத்தில் இணைந்த கல்லூரி மாணவர்களுக்கு, கல்வியிலும், அரசியலிலும் சிறந்து விளங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார்....