
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் நகர அதிமுக சார்பில் நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் துணை சபாநாயகர்மான பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சொத்து வரி, உயர்வு,விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த பேட்டியின் போது தமிழகத்தில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரையில் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தவிர எந்த திட்டங்களும் செயல்படுதவில்லை புதிய மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையம்,குடிநீர் திட்டங்கள் போன்ற எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை அதிமுகவில் செயல்படுத்தப்பட்டு வந்த தாலிக்கு தங்கம், லேப்டாப் வழங்கும் திட்டம், ஆடு, கறவை மாடு, கோழி,வழங்கும் திட்டத்தின் மூலம் கிராமப் பொருளாதாரம் முன்னேறி வந்த அனைத்து திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளது.
மொத்தத்தில் சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு என அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளது. பிறக்கும் குழந்தைகளுக்கு வரியில்லை, இறப்பவர்களுக்கு வரியில்லை இதைத் தவிர மற்ற அனைத்து வரிகளையும் தமிழக அரசு உயர்த்தி விட்டதாக குற்றம் சாட்டினார்