திமுக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக, அதிமுக சார்பில் அனைத்து பகுதிகளிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சொத்துவரி மற்றும் மின்கட்டண உயர்வுக்கு எதிராக கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி முன்பாக, கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் நகர செயலாளர் லோகுநாதன், கூடலூர் நகர செயலாளர் குறுத்தச்சலம், கூடலூர் நகர தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட பொறுப்பாளர் நாகராஜ், இளைஞர் அணி இணை செயலாளர் சசிகுமார், முன்னாள் துணைத் தலைவர் குணசேகரன், கூட்டுறவு சங்க தலைவர் தன்பால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் என பலர் கலந்துகொண்டனர்.