கோவை மாநகரில் அதிமுக 53ஆம் ஆண்டு துவக்க விழா, மாபெரும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாநகர மாவட்ட செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே. அர்ஜுனன் தலைமையில், ஏராளமான கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்து, மாண்புமிகு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், மாண்புமிகு அம்மா, மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.
இந்த விழாவில், 2026 சட்டமன்றத் தேர்தலில் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் மீண்டும் பொற்கால ஆட்சி ஏற்படுத்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. முன்னாள் அமைச்சரும் தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி. வேலுமணியின் வழிகாட்டுதலின் பேரிலும், கழக தொண்டர்கள் பெரும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, இதயதெய்வம் மாளிகையில் கழக மூவர்ணக் கொடியேற்றம் செய்யப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன. கழகத்தின் முக்கிய தலைவர்களான சிங்கை முத்து, சிடிசி ஜப்பார், பேராசிரியர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அன்னதானம் வழங்கும் நிகழ்விலும் பங்கேற்றனர்.
கோவை நகரில் உற்சாகம்:அதிமுக 53ஆவது ஆண்டு துவக்கவிழா, வழிகாட்டுநர்களின் முன்னிலையில் சிறப்பாக நடந்துகொண்டது.